‘சேட்டை புடிச்ச ஆளா இருப்பாரு போல’!.. ரோஹித் ஷர்மாவுக்கு வித்தியாசமாக ‘பிறந்தநாள்’ வாழ்த்து தெரிவித்த சஹால்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரோஹித் ஷர்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் சஹால் பதிவிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘சேட்டை புடிச்ச ஆளா இருப்பாரு போல’!.. ரோஹித் ஷர்மாவுக்கு வித்தியாசமாக ‘பிறந்தநாள்’ வாழ்த்து தெரிவித்த சஹால்..!

ஐபிஎல் தொடரின் 24-வது லீக் போட்டி நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

Chahal posts hilarious birthday wish for Rohit Sharma

தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இதில் ஜாஸ் பட்லர் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்ததாக 32 ரன்களில் ஜெய்வாலும் அவுட்டாகினார். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் (42 ரன்கள்) மற்றும் சிவம் தூபே (35 ரன்கள்) கூட்டணி அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை ராஜஸ்தான் அணி எடுத்தது.

Chahal posts hilarious birthday wish for Rohit Sharma

இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி, 18.3 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக டி காக் 70 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளும், முஸ்தாபிசூர் ரஹ்மான் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா (34) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரருமான சஹால் தனது ட்விட்டர் பக்கத்தில்,‘என் வாழ்க்கையின் காதல்’ என பதிவிட்டு சிரிக்கும் ஸ்மைலியோடு ரோஹித் ஷர்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்