“8 வருசம் RCB-ல விளையாடி இருக்கேன்”.. ஆனா இப்படி பண்ணுவாங்கனு கொஞ்சம் கூட நெனக்கல.. முதல் முறையாக ஆதங்கத்தை வெளிப்படுத்திய சஹால்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு அணி தக்க வைப்பது குறித்து சுழற்பந்து வீச்சாளர்கள் சஹால் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இன்று (29.03.2022) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் புனே மைதானத்தில் மோதவுள்ளன.
இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் சஹால், பெங்களூரு அணி தன்னை தக்கவைக்காத ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், ‘நான் ஆர்சிபி அணியுடன் உணர்வு ரீதியாக மிகவும் நெருக்கமாக இருந்துள்ளேன். 8 ஆண்டுகளாக அந்த அணிக்காக விளையாடியதால் என்னுள் எப்போதுமே ஆர்சிபி மீது நல்ல பற்று உள்ளது.. வேறு அணிக்காக நான் விளையாடுவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால் நான் ஆர்சிபி அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாட இருக்கிறேன்.
ராஜஸ்தான் அணிக்காக விளையாட பணம் அதிகமாக கேட்டு அங்கு சென்று விட்டீர்களா? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் ஆர்சிபி என்னை தக்கவைப்பது குறித்து என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை. அதுகுறித்து பேசக்கூடவில்லை. ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக என்னை அழைத்த ஆர்சிபி நிர்வாகம், இந்த சீசனில் விராட் கோலி, மேக்ஸ்வெல் முகமது சிராஜ் ஆகிய மூவரை மட்டுமே தக்க வைக்கிறோம் என்ற தகவலை மட்டும் தான் கூறினார்கள். ஆனால் நீங்கள் அணியில் நீடிக்க விரும்புகிறீர்களா? அல்லது நாங்கள் உங்களைத் தாக்க வைக்கட்டுமா? என்பது போன்ற எந்தவொரு கேள்வியையும் அவர்கள் கேட்கவில்லை.
உண்மையில் நான் அவர்களிடம் பணம் கேட்கவில்லை, என்னை தக்க வைக்க வேண்டும் என்றும் கூறவில்லை. பெங்களூரு அணியில் இருந்து வெளியேறியது வருத்தம்தான். ஜெர்சி கலர் மட்டுமே மாறி உள்ளதே தவிர என்னுடைய ஆட்டத்தின் திறன் எப்போதும் மாறாது. தொடர்ச்சியாக விக்கெட்டுகளை எடுப்பேன்’ என சஹால் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்