சஹால் வழி தனி வழி.. சூரிய குமார் யாதவின் பேட்டிங்கை பாத்துட்டு சஹால் செஞ்ச விஷயம்.. ட்ரெண்டாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி T20 போட்டியில் சூரிய குமார் யாதவின் பேட்டிங்கை பாராட்டும் விதமாக சுழற்பந்து வீச்சாளர் சஹால் செய்த சம்பவம் பலரையும் புன்னகைக்க செய்திருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவில் இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. T20 தொடர் நடைபெற்று வந்த நிலையில் இதனை இந்தியா வென்றிருக்கிறது. முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் இலங்கையும் வெற்றிபெற்ற நிலையில் தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் இறுதி மற்றும் கடைசி போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபாதி சிறப்பாக விளையாடிய நிலையில் அடுத்து வந்த சூரிய குமார் யாதவ் அதிரடி காட்டினார்.
அவருக்கு வீசப்பட்ட பந்துகள் பவுண்டரிகளுக்கு பறந்தன. 51 பந்துகளை சந்தித்த சூரிய குமார் யாதவ் 112 ரன்களை விளாசினார். இதில் 7 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் அடக்கம். இதன் பலனாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 228 ரன்களை குவித்தது.
இதனையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று கோப்பையையும் கைப்பற்றியது. இப்போட்டியில் ஆட்ட நாயகனாக சூரிய குமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், அணி வீரர்கள் மைதானத்திற்குள் நின்றிருந்த சமயத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால், அருகில் இருந்த சூரிய குமார் யாதவின் கரங்களை தனது கண்களில் வைத்துக்கொண்டதுடன். அவரது கைகளுக்கு முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சோசியம் வீடியோவில் வைரலாக பரவி வருகிறது. எப்போதும், தன்னுடைய குறும்புத்தனமான நடவடிக்கைகளால் கவனம்பெறும் சஹாலின் இந்த செயல் குறித்து நெட்டிசன்கள் வைரலாக பேசி வருகின்றனர்.
— Guess Karo (@KuchNahiUkhada) January 8, 2023
Also Read | தன்னை பாராட்டி கோலி போட்ட போஸ்ட்.. பாத்துட்டு சூரிய குமார் யாதவ் கொடுத்த ரியாக்ஷன்.. வைரலாகும் வீடியோ..!
மற்ற செய்திகள்