நெஹ்ரா பின்னாடி ஒளிஞ்சு நின்ன இந்திய வீரர்.. அடுத்த நிமிஷமே நடந்த சம்பவம்.. "சேட்ட புடிச்ச ஆளா இருப்பாரோ?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி 20 உலக கோப்பை தொடரில் அரை இறுதி சுற்று வரை முன்னேறி இருந்த இந்திய அணி, அந்த தொடருக்கு பிறகு நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.

நெஹ்ரா பின்னாடி ஒளிஞ்சு நின்ன இந்திய வீரர்.. அடுத்த நிமிஷமே நடந்த சம்பவம்.. "சேட்ட புடிச்ச ஆளா இருப்பாரோ?

Also Read | "எழுந்து வா லட்சுமி" 😭😭.. சமாதியில் கண்ணீர் விட்ட யானை பாகன் சக்திவேல்.. மனதை ரணமாக்கும் சோகம்!!

ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடர் நடைபெற்றிருந்த நிலையில், ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. இதனால், டி20 தொடரில் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் ஒரு நாள் தொடருக்கான கேப்டனாக ஷிகர் தவானும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இதில் முதலாவதாக நடந்த டி 20 தொடரை இந்திய அணி கைப்பற்றி இருந்தது. அதன் பின்னர் நடந்த ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றி இருந்தது. முன்னதாக, இந்த இரு தொடர்களிலும் பல போட்டிகள் மழை காரணமாக பாதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

chahal hide back nehra in pre match segment leaves fans in splits

அடுத்ததாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி கலந்து கொள்ள உள்ளது. இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ள சீனியர் வீரர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ள நிலையில், முதலாவதாக ஆரம்பமாக உள்ள ஒரு நாள் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதனிடையே, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய கடைசி ஒரு நாள் போட்டியின் போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் செய்த சேட்டை தொடர்பான வீடியோ ஒன்று தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரல் ஆகி வருகிறது. கடைசி ஒரு நாள் போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் வீரர்களான நெஹ்ரா மற்றும் முகமது கைஃப் ஆகியோர் அந்த போட்டி குறித்து பேசிக்கொண்டு நிற்கின்றனர். அந்த சமயத்தில் நெஹ்ராவுக்கு பின்னால் வரும் சாஹல், அப்படியே பணிந்து பின்னால் ஒளிந்து நின்று கொண்டிருக்கிறார். அவரை கடைசியாக கவனிக்கும் நெஹ்ரா, சாஹலை பார்த்து ஆல் ரவுண்டர் எனக்கூறி, தொடக்க வீரராக களமிறங்குவதையும் ஜாலியாக கேட்கிறார்.

chahal hide back nehra in pre match segment leaves fans in splits

இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருக்கும் சாஹல், மைதானத்திலோ அணி வீரர்களிடமோ தொடர்ந்து செய்யும் சேட்டைகள், மீம்ஸாக கூட மாறும் சூழலில், தற்போது சீனியர் வீரர் நெஹ்ரா முன்பு செய்த விஷயமும் அதிக கவனம் பெற்று வருகிறது.

Also Read | அழைப்பு இல்லாத திருமண வீட்டிற்கு சாப்பிட போன MBA மாணவன்.. கண்டுபிடித்து கொடுத்த அதிர்ச்சி தண்டனை!!

CHAHAL, NEHRA, PRE MATCH SEGMENT, FANS

மற்ற செய்திகள்