“அவர் எனக்கு அண்ணன் மாதிரி”.. பாசமழையை பொழிந்த குல்தீப்.. யாரை சொல்றார்ன்னு தெரியுதா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால் தனக்கு அண்ணன் போன்றவர் என குல்தீப் யாதவ் உருக்கமாக பேசியுள்ளார்.
Also Read | “ரஸல் இருக்கும்போது தேவையில்லாம அவருக்கு ஏன் அந்த வேலை கொடுக்குறீங்க?”.. KKR-ஐ விட்டு விளாசிய கவாஸ்கர்..!
ஐபிஎல் தொடரில் 41-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிதிஷ் ராணா 57 ரன்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 42 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியை பொறுத்தவரை குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், முஸ்தாபிஸூர் 3 விக்கெட்டுகளும், சேத்தன் சக்காரியா மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 42 ரன்களும், ரோவ்மேன் பவல் 33 ரன்களும் எடுத்தனர். இதில் டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய குல்தீப் யாதவிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹாலை முந்தி ஊதா தொப்பியை வாங்க முயற்சி செய்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த குல்திப் யாதவ், ‘அவர் எனக்கு அண்ணன் போன்றவர். சஹாலுடன் எப்போதும் எனக்கு போட்டி இல்லை. நான் காயமடைந்த கடினமான தருணங்களில் அவர் எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்தார். ஊதா தொப்பியை வெல்ல வேண்டும் என்பதே என் ஆசை” என்று கூறினார்.
நேற்றைய போட்டியில் 4 விக்கெட் எடுத்ததன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி குல்தீப் யாதவ் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதேபோல் 18 விக்கெட்டுகளுடன் ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்