"கொஞ்சம் கவனமா இருந்துருக்கலாம்'ல.." ஒரே நேரத்தில் கடுப்பான ரோஹித், சாஹல்.. காரணம் என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 நேற்று நடைபெற்றிருந்தது.

"கொஞ்சம் கவனமா இருந்துருக்கலாம்'ல.." ஒரே நேரத்தில் கடுப்பான ரோஹித், சாஹல்.. காரணம் என்ன?

ஸ்ரேயாஸ் அய்யரை நேற்றய போட்டியில் சேர்க்காதது ஏன்? ரோஹித் சொன்ன பதில்..!

இந்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாயசத்தில் வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது.

முன்னதாக, டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச்சினைத் தேர்வு செய்திருந்தது.அதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்திருந்தது.

'அதிரடி' ரோஹித்

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், கேப்டன் ரோஹித் ஷர்மா ஆரம்பத்திலேயே அதிரடி தொடக்கத்தை அளித்திருந்தார். நடுவில் சில விக்கெட்டுகள் விழுந்த போதும், கடைசியில் சூர்யகுமார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர், சிறப்பாக ஆடி, இந்திய அணியை 19 ஆவது ஓவரில் இலக்கை எட்ட வைத்தனர்.

chahal and rohit got frustrated by ravi bishnoi fielding

ஆட்ட நாயகன் பிஷ்னோய்

ஏற்கனவே, ஒரு நாள் தொடரையும் 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, தற்போது டி 20 தொடரையும் வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. இந்த போட்டியில், அறிமுக இளம் வீரர் ரவி பிஷ்னோய், தன்னுடைய சுழற்பந்து வீச்சுத் திறனால், 2 விக்கெட்டுகள் எடுத்து, முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதினைத் தட்டிச் சென்றார்.

இரண்டு விக்கெட்டுகள் எடுத்து, ஆட்ட நாயகன் விருதினை, ரவி பிஷ்னோய்  தட்டிச் சென்றாலும், விக்கெட் எடுப்பதற்கு முன்னர், செய்த ஒரே செயலால், இந்திய அணியின் சீனியர் வீரர்களை சற்று விரக்திக்குள் ஆகினர். வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 7 ஆவது ஓவரை சாஹல் வீசினார்.

chahal and rohit got frustrated by ravi bishnoi fielding

நழுவிய வாய்ப்பு

அப்போது, பேட்டிங் செய்த நிகோலஸ் பூரன், சாஹலின் பந்தினை நேராக மைதானத்திற்கு வெளியே அடிக்க முயற்சித்தார். அந்த சமயத்தில், சிக்ஸ் லைன் அருகே ஃபீல்டிங் நின்ற ரவி பிஷ்னோய், சிறப்பாக கேட்ச் செய்தார். ஆனால், தனது அருகே சிக்ஸர் லைன் இருப்பதை உணராத பிஷ்னோய், மறுகணமே ஒரு அடி பின்னால் சென்று, அங்கிருந்த பவுண்டரி லைன் மீது மிதித்து விட்டார்.

இறுதியில் அதிரடி

விக்கெட் வாய்ப்பைத் தவற விட்டு, அதனை சிக்ஸராகவும் மாற்றிய ரவி பிஷ்னோயால், பந்து வீச்சாளர் சாஹல் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர், சற்று விரக்தி அடைந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாமல், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட பூரன், 61 ரன்கள் அடித்து அசத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

"நீங்க எப்படிங்க அப்டி சொல்லலாம்??.." நடுவர் முடிவால் எரிச்சலான ரோஹித்.. போட்டிக்கு நடுவே பரபரப்பு

CHAHAL, ROHIT, RAVI BISHNOI, ரோஹித், சாஹல், வெஸ்ட் இண்டீஸ்

மற்ற செய்திகள்