ஐபிஎல் ‘வரலாற்று’ சிறப்புமிக்கது.. கேப்டனுக்கு அந்த ‘வாய்ப்பை’ கொடுங்க.. ‘வைடு’ சர்ச்சைக்கு கோலி வைத்த ‘முக்கிய’ கோரிக்கை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் வைடு தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது கேப்டனுக்கு ரிவியூ வாய்ப்பை தர வேண்டும் என பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் ‘வரலாற்று’ சிறப்புமிக்கது.. கேப்டனுக்கு அந்த ‘வாய்ப்பை’ கொடுங்க.. ‘வைடு’ சர்ச்சைக்கு கோலி வைத்த ‘முக்கிய’ கோரிக்கை..!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அப்போட்டியில் ஹைதராபாத் பேட்டிங் செய்தபோது, 19-வது ஓவரை சென்னை அணியின் சர்துல் தாகூர் வீசினார். அப்போது அவர் வீசிய பந்து ஒன்றை அம்பயர் வைடு என அறிவிக்க கையை உயர்த்தினார். அப்போது தோனி அம்பயரை கோபமாக முறைத்து பார்த்ததும், வைடு கொடுக்காமல் கையை கீழே போட்டுவிட்டார். தோனியின் இந்த செயல் சர்ச்சையை கிளப்பியது.

Captains should have option of reviewing wide ball, says Kohli

இந்தநிலையில் இதுகுறித்து பேசிய விராட் கோலி, ‘வைடு அல்லது இடுப்புக்கு மேல் வரும் புல்டாஸ் பந்துகளை நோ-பால் என கொடுக்கும் அம்பயர்களின் முடிவுகள் மீது ஃபீல்டிங் கேப்டனுக்கு ரிவியூ கேட்க வாய்ப்பு தர வேண்டும். ஐபிஎல் தொடர் வரலாற்று சிறப்புமிக்கது. இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஒருவேளை ஒரு ரன்னில் தோற்கும் நிலை வரும்போது ஏதாவது ஒரு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய முடியாத நிலையில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என அவர் தெரிவித்தார்.

Captains should have option of reviewing wide ball, says Kohli

மற்ற செய்திகள்