இது ஒன்னும் ஓவர் நைட்ல நடந்திடல.. என்ன ஆனாலும் சரி அவரை டீம்ல இருந்து தூக்கவே மாட்டோம்.. கேப்டன் ‘கோலி’ அதிரடி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஒருவர் அணியில் இடம்பெறுவது குறித்த எழுந்த சர்ச்சைக்கு கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு (IND vs PAK) இடையேயான முதல் போட்டி இன்று (24.10.2021) இரவு 7:30 மணிக்கு துபாய் (Dubai) மைதானத்தில் நடைபெற உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இரு அணிகளும் மோதவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக நடந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. அதில் விளையாடிய இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் எந்தெந்த வீரர்கள் ப்ளேயிங் லெவனில் இடம்பெற உள்ளனர் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
இதில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) மீது மட்டும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், ஹர்திக் பாண்ட்யா சமீப காலமாக பவுலிங் வீசுவதில்லை. நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரிலும் ஒரு ஓவர் கூட அவர் வீசவில்லை. டி20 உலகக்கோப்பை போன்ற முக்கியமான தொடர்களில் 6-வது பவுலர் அணியில் இருப்பது அவசியம். அதனால் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக வேறொரு வீரரை களமிறக்கலாம் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யா மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுத்த கேப்டன் விராட் கோலி (Virat Kohli), ‘ஹர்திக் பாண்ட்யாவை ஒருபோதும் அணியில் இருந்து வெளியேற்ற முடியாது. அதற்கு காரணம், 6-வது வீரராக களமிறங்கி போட்டியை சிறப்பாக முடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பகுதி நேர பவுலராகவும் அவரால் செயல்பட முடியும் என்பது அணிக்கு கூடுதல் பலம்.
தற்போது அவர் பவுலிங் செய்யவில்லை என்றாலும், இந்த தொடரில் இனி வரும் போட்டிகளில் குறைந்த 2 ஓவர்களாவது பாண்ட்யா பந்து வீசுவார். 6-வது வீரராக களமிறங்கி அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதென்பது, ஒரே இரவில் நடந்தது கிடையாது. இதற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே ஹர்திக் பாண்ட்யாவை அணியில் வைத்திருந்தோம். அந்த தொடரிலும் கூட அவர் வெற்றிகரமாக போட்டிகளை முடித்து கொடுத்துள்ளார்’ என விராட் கோலி கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்