“என்னாது? இன்னைக்கு அவரு ஆடப் போறாரா?? அப்போ, சிக்ஸர் மழை கன்ஃபார்ம்...!!” - எதிர்பார்ப்பில் 'ரசிகர்'கள்... செம விருந்து படைக்க போகும் வீரர்??!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்றைய ஐபிஎல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
லீக் சுற்றின் முதல் பாதியில் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் இனிவரும் போட்டிகளில் நெருக்கடியுடன் ஆட வேண்டிய நிலையில் பஞ்சாப் உள்ளது.
இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களிலும் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் முறையே இடம்பெற்றுள்ளனர். ஆனாலும், இவர்களை தவிர மற்ற வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால் பஞ்சாப் அணி தோல்வி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
மேக்ஸ்வெல் கூட இதுவரை பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முன்னதாக, வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் இதுவரை ஒரு போட்டிகளிலும் களமிறங்கவில்லை. அவர் குணமடைந்து பயிற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், இன்றைய போட்டியில் களமிறங்குவார் என தெரிகிறது. அவர் களமிறங்கும் பட்சத்தில் மேக்ஸ்வெல் அணியில் இருந்த்து வெயியேற்றப்படலாம்.
அப்படி நடக்கும் பட்சத்தில், மோசமான பார்மில் உள்ள பஞ்சாப் அணியின் தலை விதியை தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் கெயில் மாற்றியமைத்து பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வழி வகுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்