‘பயப்படாம விளையாட அவர்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன்’.. பட்லரை இன்ஸ்பயர் செய்த இளம் ‘இந்திய’ வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபயப்படாமல் எப்படி விளையாட வேண்டும் என இளம் இந்திய வீரரைப் பார்த்து கற்றுக்கொண்டதாக ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீகரத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் தோல்வியடைந்து இங்கிலாந்து வெளியேறியது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து விளையாட உள்ளது.
இந்த தொடரில் விளையாட இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் இடம்பெற்றுள்ளார். நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக சூப்பர் 12 சுற்றில் இலங்கைக்கு எதிரான போட்டியில் சதம் (67 பந்துகளில் 101 ரன்கள்) அடித்து பட்லர் அசத்தினார்.
இந்த நிலையில் ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளது குறித்து ஜாஸ் பட்லர் பேட்டியளித்துள்ளார். அதில், ‘கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை இந்தியா வென்றது. அப்போட்டியில் ரிஷப் பந்த் விளையாடிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதலில் பொறுமையாக ஆட்டத்தை ஆரம்பித்து, பின்னர் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதை அவர் எந்தவித பயமும் இன்றி செய்தார். ரிஷப் பந்தைப் பார்த்து தான், டி20 உலகக்கோப்பையில் பயமின்றி விளையாட கற்றுக்கொண்டேன்’ என ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில், விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி, ஜடேஜா ஆகிய முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்திய அணி விளையாடியது. இதனால் இந்தியா நிச்சயம் தோல்வியடைந்துவிடும் என்றே பலரும் கருதினர். ஆனால் ரிஷப் பந்த், முகமது சிராஜ், வாசிங்கடன் சுந்தர், நடராஜன், சுப்மன் கில் மற்றும் ஷர்துல் தாகூர் போன்ற இளம் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் ஆஷஸ் தொடரை கைப்பற்றி இந்தியா வரலாற்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்