ரஜினிகாந்தை 'நிராகரித்த' பிசிசிஐ.. 'அவர்'தான் வேணும்.. அடம்பிடிக்கும் பும்ரா.. ஏன் இப்டி?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

காயத்தில் இருந்து மீண்டுவரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ரஜினிகாந்த் சிவஞானம் என்பவரிடம் தனிப்பட்ட முறையில் பயிற்சிகள் எடுத்து வருகிறார். ரஜினிகாந்த் தற்போது டெல்லி அணியின் ட்ரெயினராக இருக்கிறார்.

ரஜினிகாந்தை 'நிராகரித்த' பிசிசிஐ.. 'அவர்'தான் வேணும்.. அடம்பிடிக்கும் பும்ரா.. ஏன் இப்டி?

என்றாலும் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த பும்ரா தனிப்பட்ட முறையில் ரஜினிகாந்திடம் பயிற்சிகள் எடுக்க ஆரம்பித்துள்ளார். விரைவில் குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் முனைப்புடன் இருக்கும் பும்ரா அதற்காக பயிற்சிகள் எடுப்பது தவறில்லை.

ஆனால் பிசிசிஐயால் நிராகரிக்கப்பட்ட ஒருவரிடம் பும்ரா பயிற்சி எடுத்து வருவது தான் அனைவரின் புருவங்களையும் உயர செய்துள்ளது. சமீபத்தில் இந்திய அணியின் ஸ்ட்ரென்த் அண்ட் கண்டிஷனிங் பதவிக்காக ரஜினிகாந்த் விண்ணப்பித்து இருந்தார்.

ஆனால் அவரை நிராகரித்த பிசிசிஐ அவருக்கு பதிலாக நியூசிலாந்து நாட்டை சேர்ந்த, நிக் வெப் என்பவரை நியமனம் செய்துள்ளது. இதனால் உலகின் நம்பர் 1 பவுலரான பும்ரா தேடிச்சென்று பயிற்சி எடுக்கும் ஒருவரை பிசிசிஐ நிராகரித்தது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.