"அதே பிராட் ஓவர்.." அன்னைக்கி யுவராஜ் சிங், இன்னைக்கி பும்ரா.. ஒரே ஓவரில் நடந்த உலக சாதனை.. மிரண்டு போன கிரிக்கெட் ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் பும்ரா செய்த சம்பவம், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, ஆடிய இந்திய அணி 98 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன் பின்னர், கைகோர்த்த ரிஷப் - ஜடேஜா கூட்டணி, நங்கூரம் போல நிலைத்து நின்று, இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிதறடித்தது.
பும்ரா படைத்த சாதனை
இருவரும் இணைந்து, 6 ஆவது விக்கெட்டுக்கு 222 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து, ரிஷப் பண்ட் 146 ரன்களில் அவுட்டாக, கடைசியில் ஜடேஜாவும் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர், இந்திய அணியின் கேப்டன் பும்ரா, கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி ரன் எடுத்தார். 16 பந்துகள் சந்தித்த பும்ரா, 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் எடுத்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள்..
அதிலும் குறிப்பாக, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் பும்ரா செய்த விஷயம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாக மாறி உள்ளது. தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பிராட் வீசிய ஓவரில், 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 29 ரன்கள் சேர்த்தார் பும்ரா. இத்துடன் எக்ஸ்டராஸ் மூலம் 6 ரன்கள் வரவே, மொத்தம் 35 ரன்கள் அந்த ஓவரில் சேர்க்கப்பட்டது.
டெஸ்ட் கிரிக்கெட்டில், ஒரே ஓவரில் சேர்க்கப்பட்ட அதிக ரன்கள் இது தான். முன்னதாக. கடந்த 2007 ஆம் ஆண்டு, டி 20 உலக கோப்பைத் தொடரில், இதே பிராட் ஓவரில் தான் இந்திய வீரர் யுவராஜ் சிங், 6 சிக்ஸர்கள் அடித்து 36 ரன்கள் சேர்த்திருப்பார். ஏறக்குறைய அதே போல ஒரு சம்பவமும், தற்போது டெஸ்ட்டில் நடந்துள்ளது பற்றி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் எதிர்பாராத அதிரடி பற்றியும், கிரிக்கெட் ரசிகர்கள் வியந்து போய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்