அடுத்த 'மேட்ச்'ல 'பும்ரா' வேணாம்... சொன்னா கேளுங்க..." 'அறிவுரை' வழங்கிய 'கம்பீர்'... அவரே கூறிய 'முக்கிய' காரணம்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - இங்கிலாந்து அணிகளிடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 337 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளது.
இந்திய அணி 241 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. இன்னும் ஒன்றரை நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், போட்டியின் முடிவு எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், முதல் போட்டியை மனதில் வைத்து இந்திய அணிக்கு முக்கிய ஆலோசனை ஒன்றை இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் வழங்கியுள்ளார். 'ஆஸ்திரேலிய தொடரில் காயத்தால் வெளியேறிய பும்ரா, தற்போது முழு உடற்தகுதியுடன் உள்ளார். ஆனால், இரண்டாவது போட்டியில் இந்திய அணி அவரைக் களமிறக்கக் கூடாது என நான் நினைக்கிறேன். அப்படி களமிறக்கினால், அவர் இன்னும் நிறைய ஓவர்களை வீச நேரிடும்.
அப்படி அவர் ஓய்வின்றி ஆடிக் கொண்டிருந்தால், பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ள மூன்றாவது முக்கியமான போட்டியில், அவரால் சிறப்பாக பந்து வீச முடியாமல் போகலாம். சில நேரம் அவருக்கு காயம் கூட ஏற்படலாம். அப்படி ஏதேனும் நிகழ்ந்தால், அது இந்திய அணிக்குத் தான் சிக்கலை ஏற்படுத்தும். இதனால் அடுத்த போட்டியில் அவருக்கு ஓய்வளிக்க வேண்டும்' என இந்திய அணிக்கு கம்பீர் அறிவுரை அளித்துள்ளார்.
மற்ற செய்திகள்