ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி!!. பும்ரா உடல்நிலை பற்றி வெளியான தகவல்.. கூடவே இன்னொரு சிக்கல்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் தற்போது ஐபிஎல் தொடரை தான் பெரிதும் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
காணாமல் போன வாலிபர்.. 8 நாள் கழிச்சு.. சுறா மீன் வயிற்றுக்குள் கிடைத்த கை.. நிலைகுலைந்து போன மனைவி!!
உலக அளவில் நடைபெறும் மிகச் சிறந்த டி 20 லீக் தொடர்களில் ஒன்றாக பார்க்கப்படும் ஐபிஎல் தொடர், மார்ச் 31 ஆம் தேதியன்று ஆரம்பமாக உள்ளது.
மேலும் இந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான அட்டவணையும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது. முன்னதாக இந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலமும் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றிருந்த சூழலில் இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால் தங்கள் பேவரைட் அணிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவும் ரசிகர்கள் ஆவலில் உள்ளனர்.
இதனிடையே பிரபல இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருக்கும் பும்ரா, கடந்த ஆண்டு ஆசிய கோப்பை, டி 20 உலக கோப்பை உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. சுமார் ஆறு மாத காலமாக சர்வதேச போட்டியில் பங்கெடுக்காமல் இருந்து வரும் பும்ரா, செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரில் பங்கேற்று இருந்தார்.
அதேபோல தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் பும்ரா இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலும் பும்ரா பெயர் இல்லை. இதே போல, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் பும்ரா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Images are subject to © copyright to their respective owners.
இதனால் நேரடியாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அப்படி இருக்கையில் தற்போது பும்ராவுக்கு முதுகில் மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள சூழலில் ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் கூறுகின்றது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் இந்திய அணி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டியில் முன்னேறும் வாய்ப்பை பெறும். அப்படி நடக்கும் பட்சத்தில், ஜூன் மாதம் நடைபெறும் அந்த போட்டியிலும் பும்ரா இடம்பிடிப்பதும் கேள்வியாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றது. மேலும் இந்த ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறுவதாக தகவல்கள் கூறுகின்றது.
ஏற்கனவே பல முக்கியமான தொடர்களில் பும்ரா இடம் பெறாமல் போன நிலையில், தற்போது ஐபிஎல் தொடரில் இடம் பெற மாட்டார் என தகவலும் வெளியாகி உள்ளது. இதனால் உலக கோப்பை தொடருக்கு முன்பாவது பும்ரா முழு உடற்தகுதியுடன் தயாராக வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.
Also Read | சம்பாதிக்கும் கனவுடன் சென்னையில் PART TIME JOB-க்கு போன கேரள இளம் பெண்ணுக்கு முதல்நாளே நேர்ந்த பரிதாபம்!!
மற்ற செய்திகள்