இந்த ‘ஆக்ரோஷம்’ ஞாபகம் இருக்கா?.. பல வருஷம் கழிச்சு ‘மறுபடியும்’ நடந்த ஒரு வெறித்தனமான சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சாதனை படைத்துள்ளார்.

இந்த ‘ஆக்ரோஷம்’ ஞாபகம் இருக்கா?.. பல வருஷம் கழிச்சு ‘மறுபடியும்’ நடந்த ஒரு வெறித்தனமான சம்பவம்..!

ஐபிஎல் தொடரின் 48-வது லீக் போட்டி இன்று (28.10.2020) அபுதாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக தேவ்தத் பட்டிகல் 74 ரன்கள் அடித்தார்.

இப்போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா எடுத்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனை அவர் படைத்தார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பும்ரா எடுத்த முதல் மற்றும் 100-வது விக்கெட் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்