"அவருகிட்ட எல்லாம் 'ஓகே' தான்.. ஆனா, அந்த ஒரு 'விஷயம்' மட்டும் நடந்துச்சு.. மனுஷன் 'டென்ஷன்' ஆயிடுவாரு.." 'பும்ரா' பற்றி 'ஷமி' சொன்ன 'ரகசியம்'!..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதற்போதைய கிரிக்கெட் உலகில், எதிரணியினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான பந்து வீச்சாளர்களைக் கொண்ட அணி என்றால், நிச்சயம் இந்திய அணியைக் கைக் காட்ட முடியும்.
பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகியோர் அடங்கிய இந்திய அணியின் பவுலிங் யூனிட், மற்ற கிரிக்கெட் அணிகளை கடந்த காலங்களில் அதிகம் அச்சுறுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல், புதிதாக இந்திய அணியின் பந்து வீச்சாளர்களாக களமிறங்கி வரும் சிராஜ், நடராஜன் உள்ளிட்ட வீரர்களும் மிகச் சிறப்பாக, பங்காற்றி வருகின்றனர்.
இந்திய அணியின் பந்து வீச்சு பலத்திற்கு உதாரணமாக, சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக நடைபெற்றிருந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது. இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி (Mohammed Shami), சக பவுலர்கள் குறித்து சுவாரஸ்யமாக சில தகவல்களை தெரிவித்துள்ளார்.
'இந்திய அணியின் பவுலிங் துறையில், பும்ரா சற்று வித்தியாசமானவர். அவர் அதிகமாக ஜோக் அடித்து பேச மாட்டார். சில சமயம், நாம் அவரைப் பற்றி பேசும் ஜோக்குகளை கூட, சீரியஸாக எடுத்துக் கொள்வார். ஆனால், நான், இஷாந்த், உமேஷ் ஆகியோர் ஒருவருக்கொருவர் மாறி மாறி கிண்டலடித்து பேசிக் கொள்வோம். நாங்கள் அனைவரும் மிகச் சிறந்த காம்போ. நான் கூட அதனை ரசிப்பேன். ஆனால், இதிலிருந்து பும்ரா வேறுபட்டவர்.
நாங்கள் அனைவரும் கடந்த சில ஆண்டுகளாக, ஒரு யூனிட்டாக ஆடி வருகிறோம். எங்களில் எத்தனை பேர் அன்றைய தினம் பந்து வீசினாலும், அதில் அதிகம் தாக்குதலை ஏற்படுத்த மட்டும் தான் முயற்சிப்போம். யாரேனும் ஒருவரது பந்து வீச்சில் தாக்கம் இல்லையென்றால், அவர் மட்டும் ஒதுங்கி விட்டு, மற்றவர்கள் பந்து வீச்சில் இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து விடுவார்கள்.
ஒட்டு மொத்தமாக, எங்களது அணியிலுள்ள அனைவரும், பந்து வீச்சில் ஒரு தாக்குதலை ஏற்படுத்த வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டுள்ளோம். இதனைத் தவிர்த்து, தற்காத்து ஆடுவதல்ல' என ஷமி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்