தாய்நாடு மேல இருந்த பாசம்.. கோல் அடித்தும் கொண்டாடாத ஸ்விஸ் வீரர்.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கேமரூன் அணிக்கு எதிராக கோல் அடித்த எம்போலோ அதனை கொண்டாடாமல் அமைதியாக இருந்தது பார்வையாளர்களை குழம்ப செய்துவிட்டது.

தாய்நாடு மேல இருந்த பாசம்.. கோல் அடித்தும் கொண்டாடாத ஸ்விஸ் வீரர்.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியிருக்க உலகக்கோப்பை என்றால் சொல்லவா வேண்டும்? மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் கத்தாரை எதிர்த்து ஈகுவேடார் அணி விளையாடியது. இதில் 2 - 0 என்ற கோல் கணக்கில் ஈகுவேடார் அணி வெற்றிபெற்றது. இதனையடுத்து, பலம் பொருந்திய அர்ஜென்டினாவை சவூதி அரேபியா வீழ்த்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. அதேபோல், ஜெர்மனியை ஜப்பான் தோற்கடித்தது பலரையும் திக்குமுக்காட செய்திருக்கிறது. இப்படி எதிர்பாராத திருப்பங்களுடன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குரூப் ஜி பிரிவில் உள்ள சுவிட்சர்லாந்து - கேமரூன் இடையேயான போட்டியில் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. இந்த போட்டியில் 44 வது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த எம்போலோ கோல் அடித்தார். ஆனால், கேமரூனால் கடைசிவரை கோல் அடிக்க முடியவில்லை. எம்போலோ அடித்த அந்த கோல் காரணமாக போட்டியையே ஸ்விட்சர்லாந்து வென்றது. ஆனால், இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த அந்த கோலை எம்போலோ கொண்டாடவில்லை. மாறாக அமைதியாகவே இருந்தார்.

காரணம், எம்போலோ கேமரூன் நாட்டை சேர்ந்தவர் என்பதுதான். சிறுவயதிலேயே அவருடைய குடும்பம் பிரான்சுக்கு குடியேறி, பின்னர் அங்கிருந்து ஸ்விட்சர்லாந்துக்கு சென்று செட்டில் ஆகிவிட்டது. அங்கேயே வளர்ந்த எம்போலோ ஸ்விட்சர்லாந்து கால்பந்து அணியில் இணைந்து விளையாட துவங்கியுள்ளார். போட்டியையே மாற்றிய கோலை அடித்தும் வாயில் கைவைத்தபடி எம்போலோ அமைதியாக இருந்ததை பார்த்துவிட்டு அமைதியாக இருந்த ரசிகர்கள் காரணத்தை அறிந்ததும் நெகிழ்ந்து போயினர்.

FIFA, WORLDCUP, QATAR, SWITZERLANDVSCAMEROON

மற்ற செய்திகள்