'பால்கனி' வழியா உள்ள வந்த 'மர்ம' மனிதன்...! 'உள்ள என்ன நடந்துச்சுன்னு தகவல் ரெண்டு நாள் கழிச்சு தான் வந்துருக்கு...' - அதிர்ச்சியில் 'பிரபல' கால்பந்து வீரர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிரபல கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸி ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'பால்கனி' வழியா உள்ள வந்த 'மர்ம' மனிதன்...! 'உள்ள என்ன நடந்துச்சுன்னு தகவல் ரெண்டு நாள் கழிச்சு தான் வந்துருக்கு...' - அதிர்ச்சியில் 'பிரபல' கால்பந்து வீரர்...!

அர்ஜென்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரராக திகழ்பவர் லயோனல் மெஸ்ஸி. பார்சிலோனா அணிக்காக ஆடிய மெஸ்ஸி சமீபத்தில் பிஎஸ்ஜி அணிக்காக மாறினார். இந்நிலையில் பிரான்ஸ் வந்துள்ள மெஸ்ஸி மற்றும் அவரின் குடும்பத்தாரும் பாரீஸ் நகரில் இருக்கும் லி ராயல் மொனிசா என்ற ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார்.

Break into the hotel and rob football player Lionel Messi

தினமும் இந்த ஓட்டலின் வெளியே மெஸ்ஸியை பார்க்க பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருப்பார்கள். மெஸ்ஸியும் அவ்வப்போது தன் பால்கணி வழியே வந்து ரசிகர்களை சந்திப்பது வழக்கம்.

Break into the hotel and rob football player Lionel Messi

இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று (29-09-2021) இரவு நட்சத்திர ஓட்டலின் பால்கனிப்பகுதி வழியாக நுழைந்த கொள்ளையர்கள், மெஸ்ஸி தங்கியிருந்த அறைக்குள் புகுந்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான யூரோ, பவுண்ட் பணம், நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

Break into the hotel and rob football player Lionel Messi

மெஸ்ஸி அறை மட்டுமல்லாது அந்த ஹோட்டலில் இருந்த பல்வேறு அறைகளுக்கு சென்று நகைகள், பணம் ஆகியவை கொள்ளையடித்துள்ளனர். கடந்த புதன்கிழமை நடந்த இந்த சம்பவம் குறித்த செய்தி எந்த நாளிதழிலும் வெளியாகாத நிலையில் தி சன் நாளேடு தற்போது இதனை வெளியிட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஓட்டல் நிர்வாகம் போலீஸில் புகார் அளித்தத்தின் பேரில் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வுசெய்த காவல் துறையினர் பாதுகாப்பு குறைபாடுகளால் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

Break into the hotel and rob football player Lionel Messi

கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து லி-ராயல் மொனிசா ஓட்டலில் மெஸ்ஸி தங்கியிருந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு, கொள்ளையர்கள் ஏறி வந்த பால்கணியில் தான் மெஸ்ஸி தினமும் மாலை மக்களை சந்திக்க வருவதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்