"எப்படி இருந்த டீம் அது?.. இப்போ என்னாச்சுன்னே தெரியல.. நெனச்சாலே கவலையா இருக்கு.." 'ஐபிஎல்' அணியை நினைந்து வருந்திய 'லாரா'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசன், மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வரும் நிலையில், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி முதலிடத்தில் உள்ளது.
தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இரண்டாம் இடத்திலும், டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மூன்றாம் இடத்திலும் உள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக, ஐபிஎல் போட்டிகளில், பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே போல, எந்த அணிகளும் தங்களது ஹோம் கிரவுண்டில் ஆடவில்லை. உதாரணத்திற்கு, சென்னை அணிக்கு எந்த போட்டிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறாது.
இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள சிஎஸ்கே, அனைத்து போட்டிகளையும் மும்பை வான்கடே மைதானத்தில் ஆடியுள்ளது. அதே போல, நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (MI) அணி, இதுவரை ஆடியுள்ள 5 போட்டிகளையும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆடியுள்ளது. இதில், இரண்டில் வெற்றி பெற்றுள்ள மும்பை அணி, புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. மும்பை அணி தங்களது அடுத்த போட்டியை, டெல்லி மைதானத்தில் ஆடவுள்ளது.
கடந்த இரண்டு சீசன்களில், தொடர்ந்து, ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியுள்ள மும்பை அணி, இந்த சீசனில் சற்று தடுமாற்றத்துடன் தான் காணப்படுகிறது. பவுலிங் பலமாக இருந்ததால் தான், இரண்டு போட்டியிலும் மும்பை அணி வெற்றி பெற முடிந்தது. பேட்டிங்கை பொறுத்தவரையில், சிறப்பான லைன் அப் இருந்த போதும், ரோஹித் மற்றும் சூர்யகுமார் யாதவைத் தவிர, எவரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில், இதுபற்றி பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரைன் லாரா (Brain Lara), 'இந்த ஐபிஎல் சீசனில், பெங்களூர் அணியை போல தொடர் வெற்றிகளை குவிக்கும் அணிகள், எந்த மைதானத்தில் சென்றாலும், தன்னம்பிக்கையுடன் ஆடி வருகிறது. ஆனால், அதிக தன்னம்பிக்கை இல்லாத அணிகள், போட்டி நடைபெறும் இடம் மற்றும் பிட்ச்சைத் தான் பிரச்சனையாக பார்க்கும் என நான் நினைக்கிறேன்.
இதில், மும்பை இந்தியன்ஸ் அணியைப் பற்றி தான் நான் அதிகம் கவலைப்படுகிறேன். இனிவரும் போட்டிகளுக்காக, அடுத்த மைதானத்திற்கு அந்த அணி செல்லவுள்ளது. இதன் பிட்ச், இன்னும் மந்தமானதாகும். இங்கு அவர்கள் எப்படி ஆடப் போகிறார்கள்?. இரண்டு ,முறை தொடர்ந்து சாம்பியனான மும்பை அணியை நினைக்க நினைக்க, எனக்கு அதிகம் கவலையாக உள்ளது' என பிரைன் லாரா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்