'மகி பாய்' கேப்டன்ஷிப்ல பவுலர்ஸ் செம ஹேப்பியா இருப்பாங்க...! என்ன காரணம் தெரியுமா...? - மனம் திறந்த சிஸ்கே ஆல்ரவுண்டர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதற்போது மீண்டும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் கிரிக்கெட் வீரர்கள் தற்போது மும்பையில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
மேலும், 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியில் ஏப்ரல் 10 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ் எதிராக ஆடவிருக்கிறது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்ட ஏஸ் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, மும்பையில் அணியில் பேட்ஸ்மேன்கள் சேடேஷ்வர் புஜாரா, சுரேஷ் ரெய்னா மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரான கே கவுதம் தல தோனியின் தலைமை பண்பு குறித்தும், அவரின் கேப்டன்ஷிப் கீழ் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய கவுதம், 'பந்து வீச்சாளர்கள் மஹி பாயின் கீழ் விளையாடுவதை விரும்புகிறார்கள், ஏனென்றால் அவர் ஒரு பந்து வீச்சாளரின் பலத்தை புரிந்துகொள்கிறார், மேலும் அவரிடமிருந்து சிறந்ததை எவ்வாறு பெறுவது என்பது கேப்டன் கூலுக்குத் தெரியும்' என மேற்கோளிட்டுள்ளார்.
மேலும், 'சிஎஸ்கே போன்ற ஒரு சாம்பியன் அணியில் விளையாடும் போது எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்,எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகமாகும் ஆனால் நான் இதுவரை எந்த அழுத்தத்தையும் உணரவில்லை'
'சிஎஸ்கே நிர்வாகம் கிரிக்கெட்டை புரிந்துகொள்கிறது, ஏனெனில் விளையாட்டுடனான அதன் நீண்டகால தொடர்பு காரணமாக இது வீரர்களுக்கான அணுகுமுறையில் மீண்டும் பிரதிபலிக்கிறது. ஒரு சில நேரங்களில் போட்டிகள் சரியாக நடக்காதபோது அவர்களிடமிருந்து ஆறுதலான வார்த்தைகள் மற்றும் நம்பிக்கை மட்டுமே கொடுக்கப்படும்' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்