‘யாருமே இத எதிர்பார்க்கலல’... ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’... ‘பேட்டிங் தூணையே கலங்க வைத்த தமிழக வீரர்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் குறைந்த ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பகல்-இரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 244 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதன்பின் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினர். குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித் ரன்கள் அடிக்க திணறினார்.
அவர் 29 பந்தில் 1 ரன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். இதைப் பார்த்து விரா கோலியே ஆச்சரியப்பட்டார். ஆஸ்திரேலியாவின் பேட்டிங் தூண் எனக் கருதப்படும் ஸ்மித்தை ஒற்றையிலக்க ரன்னில் வெளியேற்றியது இந்தியா அணிக்கு மிகப்பெரிய பூஸ்ட் ஆக அமைந்தது. மேலும், ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக கடைசி 21 இன்னிங்சில் ஐந்து ரன்களுக்கு கீழே அவுட் ஆனது கிடையாது. தற்போது இந்த டெஸ்டில் ஆட்டமிழந்துள்ளார்.
அஸ்வின் பந்தில் ஸ்லிப் திசையில் நின்ற ரஹானேயிடம் கேட்ச் கொடுத்தார். இதன் மூலம் அஸ்வின் - ரஹானே ஜோடி 3-வது முறையாக ஸ்மித்தை வீழ்த்தியுள்ளது. வேகப் பந்துவீச்சாளர்களை கண்டு தான் ஆஸ்திரேலிய வீரர்கள் அஞ்சினர். ஆனால், அஸ்வினின் சுழற் பந்துவீச்சை குறைத்து மதிப்பிட்டு அடித்து ஆட முயன்றனர். அதன் பலனாக அவருக்கு விக்கெட்கள் கிடைத்து வந்தது. அஸ்வின் தன் அனுபவத்தை வைத்து ஆஸ்திரேலிய அணியை மிரட்டினார்.
ஸ்டீவ் ஸ்மித்தை தொடர்ந்து டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன் என வரிசையாக மிடில் ஆர்டரை காலி செய்தார் அஸ்வின். இறுதியில் நாதன் லியோன் விக்கெட்டையும் வீழ்த்தி, 18 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். இந்தப் போட்டிக்கு முன் வரை கோலி உள்பட யாருமே அவரது பந்துவீச்சை அச்சுறுத்தலாக பார்க்கவில்லை. தற்போது அதை ஒரே இன்னிங்க்ஸில் மாற்றி இருக்கிறார் அஸ்வின்.
மற்ற செய்திகள்