“இமெயில்-ல் வந்த தகவல்”.. போலீஸ் ஸ்டேஷனில் ‘பரபரப்பு’ புகார் அளித்த கம்பீர்.. அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாஜக எம்பி கௌதம் கம்பீர் டெல்லி காவல் நிலையத்தில் பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.

“இமெயில்-ல் வந்த தகவல்”.. போலீஸ் ஸ்டேஷனில் ‘பரபரப்பு’ புகார் அளித்த கம்பீர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்பியுமான கௌதம் கம்பீருக்கு (Gautam Gambhir) ஐஎஸ்ஐஎஸ்-காஷ்மீர் (ISIS-Kashmir) அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் மிரட்டுவதாக டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

BJP's Gautam Gambhir alleges death threat from ISIS

இதுகுறித்து தெரிவித்த காவல் அதிகாரி ஸ்வேதா சவுகான், ‘இ-மெயில் மூலமாக கௌதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ்-காஷ்மீர் அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. அதனால் அவரது வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

BJP's Gautam Gambhir alleges death threat from ISIS

கௌதம் கம்பீர் கிழக்கு டெல்லி பகுதியில் வசித்து வருகிறார். இந்த இ-மெயில் நேற்று வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்