'அடுத்த சீசனிலேயே வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்???'... 'ஒன்று சேர்ந்து கேட்கும் அணிகள்?!!'... 'எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள தகவல்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று ஏற்படலாமென்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

'அடுத்த சீசனிலேயே வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்???'... 'ஒன்று சேர்ந்து கேட்கும் அணிகள்?!!'... 'எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள தகவல்!!!'...

2021 ஐபிஎல் தொடர் பற்றி இப்போதே பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இந்தாண்டு தொடர் பெரிய வெற்றி அடைந்துள்ளதால் அடுத்தாண்டு தொடரை பிசிசிஐயும் பிரம்மாண்டமாக நடத்த உள்ளது. அதிலும் குறிப்பாக ஒன்பதாவது அணியை பிசிசிஐ சேர்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் மெகா ஏலமும் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.

Big Change Can Happen In IPL As Teams Want 5 Foreigners In Playing 11

ஆனால் இதை எல்லாவற்றையும் விட பெரிய மாற்றம் ஒன்றை செய்ய வேண்டுமென ஐபிஎல் அணிகள், பிசிசிஐயிடம் தொடர்ந்து கேட்டு கேட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தாண்டு வரை ஐபிஎல் தொடரில் ஒரு அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்களே விளையாட  அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், அதை மாற்றக் கோரி சில ஐபிஎல் அணிகள் தொடர்ந்து கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு அணியில் ஐந்து வெளிநாட்டு வீரர்களை ஆட வைக்க அனுமதிக்க வேண்டும் என்பதே ஐபிஎல் அணிகளின் கோரிக்கையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Big Change Can Happen In IPL As Teams Want 5 Foreigners In Playing 11

தற்போது ஒரு ஐபிஎல் அணியில் ஏழு இந்திய வீரர்களும், நான்கு வெளிநாட்டு வீரர்களும் விளையாட அனுமதிக்கப்படுகிறது. இதில் ஏழு இந்திய வீரர்களில் இரண்டு அல்லது மூன்று பேராவது உள்ளூர் வீரர்கள் அல்லது இந்திய வீரர்களாக விளையாடும் நிலையில், சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்களை அதிகமாக விளையாட வைக்க முடியாத சிக்கல் உள்ளது. அதனால் இந்த விதிமுறையை வைத்து சரியான அணியை தேர்வு செய்ய முடியவில்லை எனக் கருதும் அணிகள் தற்போது இந்த கோரிக்கையை கையில் எடுத்துள்ளன.

Big Change Can Happen In IPL As Teams Want 5 Foreigners In Playing 11

அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இந்த மாற்றத்தை பிசிசிஐ செய்தால் அது ஐபிஎல் தொடரில் செய்யப்பட்ட பெரிய மாற்றமாக இருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அப்படி இந்த விதிமுறை மாற்றப்பட்டால் அதை இந்திய ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் சந்தேகமும் ஒருபக்கம் எழுந்துள்ளது.

மற்ற செய்திகள்