"ரன்னு 16 இருக்கு, பாலு ஒண்ணு தானே இருக்கு".. டி 20 போட்டியில் நடந்த சுவாரஸ்யம்.. பின்னி பெடல் எடுத்த ஸ்மித்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் ஐபிஎல் டி 20 லீக் தொடர்கள் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது போலவே ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பேஷ் டி20 தொடரும் அதிக அளவில் பிரபலமாக நடக்கும் தொடராகும்.

"ரன்னு 16 இருக்கு, பாலு ஒண்ணு தானே இருக்கு".. டி 20 போட்டியில் நடந்த சுவாரஸ்யம்.. பின்னி பெடல் எடுத்த ஸ்மித்!!

Also Read | விபத்தில் கணவரை இழந்த பெண்.. 45 வயதில் மகன் முன்னிலையில் நடந்த மறுமணம்.. நெகிழ்ச்சி சம்பவம்!!

இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஆடி வருகின்றனர். அந்த வகையில் 2022 - 23 ஆண்டின் பிக்பேஷ் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வருகிறது.

இதன் லீக் சுற்றுகள் ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ள நிலையில் சமீபத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்ஸர்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திருந்தது.

Big Bash League 16 runs scored in one ball steve smith

நிதானமாக பேட்டிங் செய்யக் கூடிய வீரர் என அறியப்படும் ஸ்டீவ் ஸ்மித், ஏற்கனவே பிக்பேஷ் தொடரில் இரண்டு சதங்களை அடுத்தடுத்து அதிரடியாக ஆடி எடுத்து சாதனை படைத்திருந்தார். அதே போல இந்த போட்டியிலும் 33 பந்துகளில் நான்கு ஃபோர்கள் மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் 66 ரன்கள் எடுத்து பட்டையை கிளப்பி இருந்தார் ஸ்மித்.

Big Bash League 16 runs scored in one ball steve smith

இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து தற்போது குவாலிஃபயர் சுற்றுக்கும் முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் ஒரே பந்தில் 16 ரன்கள் சேர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

Big Bash League 16 runs scored in one ball steve smith

இந்த போட்டியில் ஜோயல் பாரிஸ் வீசிய இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக சிக்சர் ஒன்றை அடித்திருந்தார். இந்த பந்து நோபால் என நடுவரால் அறிவிக்கப்பட்ட, மீண்டும் அந்த பந்து வீசப்பட்டது. அதனை ஜோயல் பாரிஸ் வைடாக வீச பந்து பவுண்டரிக்கும் சென்றது. இதனால், அவர் பந்து வீசுவதற்கு முன்பாகவே அதில் 12 ரன்கள் சேர்க்கப்பட்டது. அந்தப் பந்து வைடு என்பதால் ஃப்ரீ ஹிட் நிலுவையில் இருக்க, அடுத்த பந்தில் ஸ்டீவ் ஸ்மித் ஃபோர் ஒன்றை பறக்க விட்டார்.

அந்த வகையில் பந்து வீச்சாளர் செய்த தவறால் ஒரே பந்தில் 16 ரன்கள் சேர்க்கப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.

Also Read | "1101 நாளா இதுக்காக தான் வெயிட்டிங்".. ஒரு நாள் போட்டியில் ரோஹித் கொடுத்த கம்பேக்.. கொண்டாடும் ரசிகர்கள்!!

CRICKET, BIG BASH LEAGUE, STEVE SMITH

மற்ற செய்திகள்