குண்டைத் தூக்கிப் போட்ட அந்த ஒரு 'செய்தி'.. "என்னங்கய்யா இஷ்டத்துக்கு கொளுத்தி போட்டு வெச்சுருக்கீங்க.." பரபரப்பை உண்டு பண்ணிய 'சம்பவம்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் நடைபெற்று வந்த 14 ஆவது ஐபிஎல் சீசன், கொரோனா தொற்றின் காரணமாக தற்போது பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியைக் காண, கிரிக்கெட் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

குண்டைத் தூக்கிப் போட்ட அந்த ஒரு 'செய்தி'.. "என்னங்கய்யா இஷ்டத்துக்கு கொளுத்தி போட்டு வெச்சுருக்கீங்க.." பரபரப்பை உண்டு பண்ணிய 'சம்பவம்'!!

இங்கிலாந்தின் சவுதாம்ப்டனில் நடைபெறவுள்ள இந்த போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளது. இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி கலந்து கொள்கிறது. இந்த இரண்டு தொடருக்கும் சேர்த்து, இந்திய அணியை சில தினங்களுக்கு முன் பிசிசிஐ வெளியிட்டிருந்தது.

மொத்தம் 20 பேர் இடம்பெற்றுள்ள நிலையில், கூடுதல் வீரர்களாக 4 பேரும் தேர்வாகியிருந்தனர். ஆனால், இந்த தொடருக்காக, முழு ஃபார்ம் மற்றும் உடற்தகுதியுடன் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் (Bhuvneshwar Kumar) இடம்பெறாமல் போனது, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

டெஸ்ட் தொடர் நடைபெறும் இங்கிலாந்து மைதானங்களில், புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசக் கூடியவர். அப்படி இருந்தும் அவரை ஏன் அணியில் எடுக்கவில்லை என ஒரு பக்கம் குழப்பமும் ஏற்பட்டது.

இந்நிலையில், டெஸ்ட் அணியில் புவனேஷ்வர் குமார் ஏன் இடம்பெறவில்லை என்பது பற்றி, தகவல் ஒன்று வெளியாகி, மேலும் பரபரப்பை உண்டு பண்ணியிருந்தது. புவனேஷ்வர் குமார் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க அதிக விருப்பம் காட்டவில்லை என்றும், குறைந்த வடிவிலான போட்டிகளுக்கே இனி அவர் அதிக ஆர்வம் காட்டுவார் என்றும் பல நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த தகவலின் படி, புவி டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறாமல் போனால், இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்றும் ரசிகர்கள் வேதனை அடைந்தனர். இந்நிலையில், தன்னைக் குறித்து வெளியான தகவல் பற்றி, புவனேஷ்வர் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விருப்பம் காட்டவில்லை என ஒரு செய்தி வலம் வந்த வண்ணம் உள்ளது. அணியின் தேர்வை பொருட்படுத்தாமல், மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் நான் என்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து, அதனை நான் செய்து கொண்டே தான் இருப்பேன். தயவு செய்து ஏதேனும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டதன் பெயரில், உங்களுக்கு தோன்றிய விஷயத்தை மேற்கோள் காட்டி எழுதாதீர்கள்' என தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

 

புவனேஷ்வர் குமார் டெஸ்ட் போட்டிகளில் இனிமேல் பங்கேற்கப் போவதில்லை என தகவல் வெளியானதால், ரசிகர்கள் சற்று வருத்தமடைந்த நிலையில், இது வதந்தி தான் என்பதை புவனேஷ்வர் குமார் உறுதி செய்துள்ளதால், ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மற்ற செய்திகள்