டிராவிட் ‘கோச்’-அ வந்தது எங்களோட அதிர்ஷ்டம்.. ‘ரொம்ப ஆர்வமாக இருக்கோம்’.. மூத்த வீரர் உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் டிராவிட் குறித்து வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் புகழ்ந்து பேசியுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக கடந்த மாதம் இலங்கை சென்ற இந்திய அணி, அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. தற்போது கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால், இந்த தொடருக்கு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கேப்டனாகவும், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய புவனேஷ்வர் குமார், ‘இந்திய அணிக்கு துணைக்கேப்டனாக இருப்பது எனக்கு மகிழ்ச்சிதான். ஒரு மூத்த வீரராக அணியில் இருக்கும் அனைத்து இளம் வீரர்களுக்கும் என்னுடைய ஆலோசனைகளை வழங்கி அவர்களை மெருகேற்றுவதுதான் எனது முக்கிய பணி. இந்த தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. என்னுடைய முழு திறமையும் இந்த தொடரில் வெளிப்படுத்துவேன்’ என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ஐபிஎல் தொடரில் ராகுல் டிராவிட்டுக்கு எதிராக நான் விளையாடி உள்ளேன். அப்போதுதான் நான் ஐபிஎல் தொடரில் அறிமுகமான தருணம். அந்த சமயம் அவரிடம் பேச எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இப்போது பயிற்சியாளராக அவர் இருப்பதால் அவருடன் என்னால் நெருங்கி பேச முடியும். அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். ராகுல் டிராவிட் பயிற்யாளராக கிடைத்திருப்பது எங்களுடைய அதிர்ஷ்டம்’ என புவனேஷ்வர் குமார் கூறியுள்ளார்.
முன்னதாக ஷிகர் தவான் மற்றும் புவனேஷ்வர் குமார் தலைமையில் இரு அணிகளாக பிரிந்து இந்திய வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினர். அதில் தவான் அணியை வீழ்த்தி புவனேஷ்வர் குமார் தலைமையிலான அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்