'எனக்கு குணமாயிடுச்சு'... 'ஆனா களத்திற்கு வருவாரா 'அதிரடி வீரர்'? ... வீடியோ வெளியிட்டு அசத்தல் !
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பை போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவின் முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்தது இந்திய ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. இதனிடையே காயத்திலிருந்த புவனேஷ்வர் குமார், மீண்டும் பயிற்சியில் ஈடுபடுவது, ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.
இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியின் போது தான் வீசிய 3-வது ஓவரின் போது கால் தொடைப் பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டது. இதனால் போட்டியின் பதியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இது இந்திய ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்கு பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டார். அவரும் ஆப்கானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசி, ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியினை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் புவனேஷ்வர் குமார் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் பயிற்சி செய்யும் வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது இந்திய ரசிகர்களுக்கு கடும் உற்சாகத்தை அளித்துள்ளது. இதனிடையே அவர் காயத்திலிருந்து குணமடைந்த போதிலும், நாளை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டியில் பங்கேற்கப்பட்டார் என தெரிகிறது.
இருப்பினும் அடுத்தடுத்து நடைபெற உள்ள இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பர் என தெரிகிறது. புவனேஷ்வர் குமார் காயத்திலிருந்து மீண்டாலும் போதிய பயிற்சிகள் மேற்கொண்ட பின்பு தான் அணியில் சேர்க்கப்படுவர் என தெரிகிறது.
Look who's back in the nets 💪💪#TeamIndia #CWC19 pic.twitter.com/m8bqvHBwrn
— BCCI (@BCCI) June 25, 2019