"அடுத்த 6 'மாசம்'... கண்டிப்பா அவரால 'கிரிக்கெட்' ஆட முடியாது... 'இந்திய' அணிக்கு எழுந்த 'சிக்கல்'!!... வெளியான 'அறிக்கை'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான புவனேஸ்வர் குமார், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடிய போது, தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு பாதியிலேயே தொடரில் இருந்து விலகினார்.

"அடுத்த 6 'மாசம்'... கண்டிப்பா அவரால 'கிரிக்கெட்' ஆட முடியாது... 'இந்திய' அணிக்கு எழுந்த 'சிக்கல்'!!... வெளியான 'அறிக்கை'...

அதன் பிறகு, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலும் காயம் காரணமாக புவனேஸ்வர் குமார் இடம்பெறவில்லை. இந்நிலையில், தற்போது அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவருக்கு அடுத்த மாதம் பயிற்சிகள் முடிவடையவுள்ள நிலையில், அவர் குணமடைய இன்னும் சில மாதங்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது.

bhuvaneshwar kumar will rest for next 6 month says report

அடுத்த 6 மாதங்களுக்கு புவனேஸ்வர் குமார் முழுமையாக ஓய்வு பெற வேண்டும் என அதிகாரபூர்வ செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. இதனால் அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தான் புவனேஸ்வர் குமார் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

bhuvaneshwar kumar will rest for next 6 month says report

புவனேஸ்வர் குமார் இந்திய அணியில் இல்லாதது சற்று பின்னடைவாக உள்ள நிலையில், அவர் இன்னும் ஆறு மாதங்கள் பங்கேற்க மாட்டார் என்பது இந்திய அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்