"இந்தியா தான் உலககோப்பை ஜெயிக்கும்னு மனசு சொல்லுது.. ஆனா மூளை.." வைரலாகும் பாவனாவின் கணிப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் எந்த அணி சாம்பியன் ஆகும் என்பது குறித்த  கணிப்புகள் வரத்தொடங்கி உள்ளன.

"இந்தியா தான் உலககோப்பை ஜெயிக்கும்னு மனசு சொல்லுது.. ஆனா மூளை.." வைரலாகும் பாவனாவின் கணிப்பு!

Also Read | தமிழில் பேசி பட்டையை கிளப்பிய சூர்யகுமார்.. வீடியோவை பார்த்து ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!!

ஆஸ்திரேலியாவில்  நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை தொடர்,  தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

குரூப் 1 இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளன.

இன்று புதன்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியுசிலாந்து அணி பாகிஸ்தான் அணியை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்த்து விளையாடுகிறது.

நாளை வியாழக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் எதிர்த்து விளையாட உள்ளது.

இந்த அரையிறுதி ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில்  விளையாடுவார்கள். இந்த அரையிறுதி & இறுதிப்போட்டி டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன.

Bhavna Balakrishnan T20 WORLD CUP Final Prediction

அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நாளை வியாழக்கிழமை (நவம்பர் 10) நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. குரூப் பி பிரிவில் இந்தியா 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 7 புள்ளிகளுடன் குரூப் ஏ பிரிவில் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரது கவனமும் இந்த போட்டியை எதிர்நோக்கி உள்ளது.

இச்சூழலில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான பாவனா பாலகிருஷ்ணன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணிப்பை பகிர்ந்துள்ளார். அதில், "

இந்த 4 அணிகளில் (இந்தியா, நியுசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து) எது சரியாக 4 நாட்களில் கோப்பையை கைப்பற்றும் ??. இதயம் இந்தியா ❤️ என சொல்கிறது. என் மூளை? இப்போதைக்கு அதைப்பற்றி யோசிப்பதை நிறுத்தி விட்டேன் 🤪. நீங்கள் என்ன நினைக்கறீர்கள்?" என பாவனா பதிவிட்டுள்ளார்.

Bhavna Balakrishnan T20 WORLD CUP Final Prediction

பாவனா பாலகிருஷ்ணன் தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக பணியாற்ற ஆஸ்திரேலியா சென்றுள்ளார். உலகக்கோப்பை அருகில் எடுத்த தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இந்த பதிவை பாவனா பாலகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.

Also Read | T20 Worldcup: இந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதி போட்டி.. பிட்ச் யாருக்கு சாதகம்? மழை வருமா? முழு தகவல்

CRICKET, T20 WORLD CUP, BHAVNA BALAKRISHNAN, T20 WORLD CUP FINAL PREDICTION

மற்ற செய்திகள்