Annaathae others us

ஒருவேளை 'அப்படி' நடந்திருந்தா கண்டிப்பா இந்தியா 'செமி ஃபைனலுக்கு' போயிருக்கும்...! 'அது' நடக்காதது தான் ஒரே பிரச்சனை...! - பவுலிங் கோச் கருத்து...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு கூட செல்லாமல் திரும்பியுள்ளது.

ஒருவேளை 'அப்படி' நடந்திருந்தா கண்டிப்பா இந்தியா 'செமி ஃபைனலுக்கு' போயிருக்கும்...! 'அது' நடக்காதது தான் ஒரே பிரச்சனை...! - பவுலிங் கோச் கருத்து...!

இந்தியா முதலில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலிலேயே பெரிய அணிகளான பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் தோல்வியை சந்தித்தது. ஆனால், அதன் பின் ஆடிய ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணியை அடித்து நொறுக்கியது என்று தான் சொல்லவேண்டும்.  இருந்தாலும் நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து தோற்றிருந்தால் இந்திய அணி கண்டிப்பாக அரை இறுதிக்கு சென்றியிருக்கும்.

Bharath has said rest is important for the Indian team.

தொடக்கத்தில் இந்தியாவின் இந்த மோசமான ஆட்டத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் வந்தது. அதோடு, இந்திய அணியின் தோல்விக்கு ஐபிஎல்-லும் ஒரு முக்கிய காரணமாக செய்திகள் பரவியது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் செய்தியாளர் சந்திப்பில் தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Bharath has said rest is important for the Indian team.

அதில், 'எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் டாஸ் ஒரு அணியை ஜெயிக்க வைக்காது. ஆனால் ஐக்கிய அரபு அமீரக விளையாட்டு களத்தில் அப்படியில்லை. இங்கு டாஸ் முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

இங்குள்ள ஆடுகளங்கள் அப்படி இல்லை, முதலில் பேட்டிங் செய்வதற்கும், இரண்டாவது பேட்டிங் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன' என தெரிவித்தார்.

Bharath has said rest is important for the Indian team.

அதையடுத்து ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடிய வீரர்கள்  கூட உலகக்கோப்பை தொடரில் சொதப்பியதற்கு காரணம் ஐபிஎல் தொடர் தானா?' என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், 'ஒருவகையில் பார்த்தால் அதுவும் உண்மைதான். முதலில் ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அடுத்து கொரோனா பரவல் குறைந்தவுடன் ஆறு மாதங்களாக இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு இல்லாமல் வெளிநாட்டு பயணங்கள் இருந்தன.

இவ்வாறு ஓய்வில்லாமல் இருக்கும் வீரர்கள் தொடர்ந்து விளையாடும்போது பயோ பபுளில் வேறு இருக்கின்றனர். இதனால் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை வீரர்கள் மனரீதியாக பலவீனமாக இருக்கிறார்கள்.

இந்திய அணி ஓய்வின்றி விளையாடியதும் உலகக் கோப்பையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஒருவேளை இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வில் இருந்திருந்தால் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம்' என கூறியுள்ளார்.

BHARATH, INDIAN TEAM., BOWLING COACH, REST

மற்ற செய்திகள்