அணியில் சேர்க்காததால் கோபப்பட்ட உமேஷ் யாதவ்.. மனம் திறந்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் குறித்து பேசியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண்.

அணியில் சேர்க்காததால் கோபப்பட்ட உமேஷ் யாதவ்.. மனம் திறந்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண்..!

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | சாலையில் சென்றவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பாலிவுட் நடிகர் சன்னி தியோல்.. வைரலாகும் வீடியோ..!

உமேஷ் யாதவ்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் இதுவரையில் 55 டெஸ்ட் போட்டிகளிலும் 75 ஒரு நாள் போட்டிகளிலும் 9 T20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 168 விக்கெட்டுகளையும் ஒரு நாள் போட்டிகளில் 16 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ள உமேஷ் யாதவ் டி20 போட்டிகளில் 12 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். 2010 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அறிமுகமான இவர், அடுத்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். நடைபெற்று வரும் கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியில் உமேஷ் யாதவ் இடம்பெற்றுள்ளார். இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் உமேஷ் யாதவ் குறித்து பேசி இருக்கிறார்.

Bharat Arun about umesh yadav angry for his selection in Team

Images are subject to © copyright to their respective owners.

சவால்

பொதுவாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவது என்பது முன்னணி வீரர்களுக்கே சற்று சவாலான காரியமாக மாறி உள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருந்தாலும் அடுத்தடுத்த வீரர்கள் அணிக்குள் இடம்பெற காத்திருக்கின்றனர். குறிப்பாக பும்ரா, ஷமி, உம்ரான் மாலிக், உமேஷ் யாதவ் என யாரைத் தேர்ந்தெடுப்பது என தேர்வு குழு உறுப்பினர்கள் அவ்வப்போது ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் பௌலிங் பயிற்சியாளரான பரத் அருண் உமேஷ் யாதவ் அணியில் இடம்பெறாமல் இருந்தபோது கோபப்பட்டதாகவும் அதனால் தன்னிடம் ஒரு நாள் பேசாமல் இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

பரத் அருண்

இது குறித்து பேசியுள்ள அவர், "உமேஷ் அணியில் இடம் பெறாமல் ஏமாற்றம் அடைந்த பல நிகழ்வுகள் உள்ளன. குறிப்பாக சிறப்பாக செயல்பட்ட பிறகும் சில முறை இப்படி நடந்திருக்கிறது. அப்போது அவர் என்னை அணுகி, 'ஏன் என்னை தேர்ந்தெடுக்கவில்லை? நான் என்ன தவறு செய்தேன்?' எனக் கேட்பார். உண்மையில் அது கடினமான முடிவாகவே இருந்திருக்கும். ஹர்திக் பாண்டியாவுடன் சேர்த்து 3 பவுலர்களை தேர்ந்தெடுப்பது சவாலான காரியமாகவே இருந்துள்ளது. குறிப்பாக உமேஷ் யாதவ் பல முறை அணியில் சேர்க்கப்படவில்லை" என்றார்.

Bharat Arun about umesh yadav angry for his selection in Team

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து பேசியுள்ள அவர்,"சில சமயங்களில் ஒரு நாள் கூட என்னிடம் பேசாமல் இருக்கும் அளவுக்கு கோபப்பட்டு, பிறகு என்னிடம் வந்து எனக்கு புரிகிறது என்று சொல்வார். அவரிடம் பேசும் போது கூட, 'உனக்கு கோபம் வரவில்லையென்றால், உன்னிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறீர்கள்' என்றேன். உமேஷ் அற்புதமானவர் மற்றும் நம் பக்கம் இருக்கவேண்டும் என நினைக்க வைக்கக்கூடியவர்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Also Read | ஜப்பானின் டோக்கியோ அருகே பூத்துக் குலுங்கும் நீல மலர்.. வைரலாகும் வீடியோ..!

CRICKET, BHARAT ARUN, UMESH YADAV

மற்ற செய்திகள்