ஜெயிக்கணும்னு வெறி இருந்தா போதும்.. 94 வயசுல உலக தடகள போட்டியில் சாதனை புரிந்த பாட்டி.. கொண்டாடித்தீர்க்கும் பிரபலங்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவை சேர்ந்த பகவானி தேவி தாகர் எனும் 94 வயதான மூதாட்டி சர்வதேச அளவிலான தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து பலர் இவரை வாழ்த்தி வருகின்றனர்.

ஜெயிக்கணும்னு வெறி இருந்தா போதும்.. 94 வயசுல உலக தடகள போட்டியில் சாதனை புரிந்த பாட்டி.. கொண்டாடித்தீர்க்கும் பிரபலங்கள்..!

Also Read | "நாங்க கல்யாணம் செஞ்சுக்கிட்டோம்.. ஆனா".. காதல் தம்பதி அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்...பதறிப்போன பெற்றோர்..!

சாதனை படைக்க விரும்பும் நபர்களுக்கு, வெற்றியின் உச்சத்தை தொட விரும்பும் கைகளுக்கு தடைகள் எப்போதுமே ஒரு பொருட்டாய் அமைவதில்லை. அது, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, வயதாக இருந்தாலும் சரி. தங்களுடைய விடா முயற்சியின் பலனாக தங்களது வெற்றி சரித்திரத்தை எழுதுகிறார்கள் பலர். இவர்களை போன்றவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தோடு துவங்கப்பட்டது தான் உலக மாஸ்டர் தடகள போட்டி. இதன்மூலம், 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சாதிக்க, வயது ஒரு தடை இல்லை என்பதை இந்த உலகிற்கு மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் இந்தியாவை சேர்ந்த பகவானி தேவி தாகர் எனும் மூதாட்டி.

தங்க பதக்கம்

பின்லாந்து நாட்டின் டம்பேர்-ல் நடைபெற்று வருகிறது உலக மாஸ்டர்ஸ் தடகள சேம்பியன்ஷிப் போட்டிகள். இதில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்ட 94 வயதான பகவானி தேவி தாகர் அதில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர், இலக்கை 24.74 வினாடிகளில் ஓடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். அது மட்டும் அல்லாமல் ஷாட் புட்-போட்டியில் கலந்துகொண்ட இவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்திருக்கிறது.

Bhagwani Devi Dagar wins gold in World Masters Athletics Championships

பாராட்டு

இந்நிலையில், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"இந்தியாவின் 94 வயதான பகவானி தேவி தாகர் அவர்கள் வயது ஒரு தடையல்ல என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். அவர் டம்பேர்-ல் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சேம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் 24.74 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கம் வென்றார். ஷாட் புட்டில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். உண்மையிலேயே இது பாராட்டுக்குரிய முயற்சி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகமே காலுக்கடியில்..

இந்தியாவின் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில்,"உலகமே அவரது காலடியில். பின்லாந்தில் நடந்த உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்காக ஒரு தங்க பதக்கம் மற்றும் இரண்டு வெண்கல பதக்கம் வென்றதற்காக, பகவானி தேவி தாகர் அவர்களை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். 94 வயதில் என்ன ஒரு சாதனை"  எனக் குறிப்பிட்டுள்ளார்.

Bhagwani Devi Dagar wins gold in World Masters Athletics Championships

இந்நிலையில், பகவானி தேவி தாகர் அவர்களுக்கு சமூக வலை தளங்கள் வாயிலாக பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "சிங்கிளாகவே இருங்க".. இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த எம்பி.. மேட்ரிமோனி நிறுவன தலைவர் போட்ட ட்வீட்.. அதுக்கு அவர் கொடுத்த ரிப்ளை தான் செம்ம..!

BHAGWANI DEVI DAGAR, GOLD MEDAL, WORLD MASTERS ATHLETICS CHAMPIONSHIPS

மற்ற செய்திகள்