"'மும்பை'க்கு ஆப்பு வைக்கப் போறது இந்த 'டீம்' தான்... ஜாக்கிரதையா இருங்க..." - மும்பை அணியை எச்சரித்த முன்னாள் 'வீரர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வி பெறும் அணி. எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோத வேண்டும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு நுழையும்.
மும்பை அணி வழக்கம் போல பலம் வாய்ந்த அணியாக இந்த சீசனிலும் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் மும்பை அணி தான் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் என பலர் எதிர்பார்த்து வருகின்றனர். இதனிடையே, இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளருமான சஞ்சய் பேங்கர் இன்றைய போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
'டெல்லி அணியைப் பொறுத்தவரையில் அதிக அனுபவம் இல்லாத அணி தான். இந்த சீசனின் ஆரம்பத்தில் வெற்றி பாதையில் ஆரம்பித்த டெல்லி அணி, இறுதியில் தொடர்ச்சியாக பல போட்டிகளில் தோல்வியை தழுவியிருந்தது. ஆனால், கடைசி போட்டியில் சிறப்பாக ஆடி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தது.
டெல்லி அணியில் இளம் வீரர்கள், அனுபவம் வாய்ந்த வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் என சிறப்பான கலவையில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றில் மும்பை அணிக்கு சவாலாக விளங்கும் ஒரே அணி டெல்லி கேப்பிடல்ஸ் தான். அதனால் மும்பை அணி ஜாக்கிரதையாக இருங்கள். இன்றைய வெற்றி அவ்வளவு சாதாரணமல்ல' என கூறினார்.
மற்ற செய்திகள்