VIDEO: ‘சீனியர் ப்ளேயர் கூட சண்டை போட்ட ஸ்டோக்ஸ்’!.. டெஸ்ட் போட்டியில் பரபரப்பு...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரும் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIDEO: ‘சீனியர் ப்ளேயர் கூட சண்டை போட்ட ஸ்டோக்ஸ்’!.. டெஸ்ட் போட்டியில் பரபரப்பு...!

இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 284 ரன்களும், இங்கிலாந்து அணி 181 ரன்களும் எடுத்தன.

இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 272 ரன்களை அடித்து, மொத்தமாக 375 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனை அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 268 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது மைதானத்தில் இங்கிலாந்து துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ், மூத்த வீரர் ஸ்டூவர்ட் பிராட்டுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முதலில் ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸிடம் ஏதோ சொல்ல, உடனே அவரிடம் ஸ்டோக்ஸ் கடிந்துகொண்டார். இருவரும் என்ன பேசிக்கொண்டனர் என தெரியவில்லை. இதனால் மைதானத்தில் சில நிமிடம் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து போட்டிக்கு நடுவே இருவரும் சிறு புன்னகையுடன் சாதாரணமாக நடந்துகொண்டதை அடுத்து இங்கிலாந்து ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

CRICKET, ICC, SAVENG, BENSTOKES, STUARTBROAD, TEST