ஒரு வாரம் கழிச்சு 'வெயிட்' செக் பண்ணி பார்த்தப்போ ஷாக் ஆயிட்டேன்...! நானாவது பரவா இல்ல, 'அவரெல்லாம்' பாத்ரூம்ல தான் இருந்தாரு...! - பென் ஸ்டோக்ஸ் வேதனை...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅகமதாபாத் டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து வீரர்களுக்கு வயிற்றில் கோளாறு ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஒரே வாரத்தில் 5 கிலோ உடல் எடையை இழந்ததாகவும் வயிற்றுக் கோளாறினால் ஜாக் லீச் மைதானத்தை விட டாய்லெட்டில்தான் அதிக நேரம் இருந்தார் எனவும் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து தொடரை 3-1 என்று இழந்தது, டி-20 தொடர் மார்ச் 12-ம் தேதி நடைபெறுகிறது, இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது,
எங்கள் அணிக்காக அர்ப்பணிப்புடன் இருந்தோம். 41 டிகிரி வெயில் உடலுக்கு உகந்தது அல்ல, அதனால் வயிற்று உபாதைகள் ஏற்பட்டன, ஒரு வாரத்தில் நான் ஐந்து கிலோ உடல் எடையை இழந்திருந்தேன்.
ஜேக் லீச் பவுலிங் ஸ்பெல்லுகளுக்கு இடை இடையே பெவிலியன் சென்றார், களத்தில் லீச் இருந்த நேரத்தை விட டாய்லெட்டில் இருந்த நேரமே அதிகம். ஆனால் இதெல்லாம் சாக்குப்போக்கு அல்ல, அனைவரும் டெஸ்ட்டில் விளையாட முழு மனதுடன் இறங்கினோம். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் கடினமான சூழலில், உடலில் ஏற்பட்ட கோளாறுகளுடன் இங்கிலாந்து வெல்ல அனைத்து முயற்சிகளையும் பங்களிப்பையும் செய்தார்கள்.
நிறைய வீரர்களுக்கு இதுதான் இந்தியாவில் முதல் கிரிக்கெட் பயணம். இது இவர்களுக்கு ஆழமாகக் கற்கும் பயணமாகும். ஆலி போப், ஜாக் கிராலி, அல்லது டாம் சிப்ளி நாம் இந்த உயர்ந்த டெஸ்ட் தளத்துக்கு லாயக்கற்றவர்கள் என்று மனம் தளர வேண்டியதில்லை. நீங்கள் நிச்சயம் பிரமாதமான வீரர்கள்.
என் கிரிக்கெட் வாழ்க்கையிலும் இத்தகைய தன்னம்பிக்கை இழக்கும் தருணங்களைச் சந்தித்து மீண்டிருக்கிறேன். ஏமாற்றத்தையே வெற்றியின் படிகளாக மாற்றி உங்களை நீங்களே உத்வேகப்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும்.
இவ்வாறு பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்