"இந்தியா பக்கம் திரும்ப வேண்டிய மேட்ச் இது.. இப்டி பண்ணிட்டாங்களே.." 'சர்ச்சை'யை ஏற்படுத்திய அந்த 'சம்பவம்'... கடுப்பான 'ரசிகர்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியயா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே இன்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில், கடின இலக்கை எளிதாக எட்டிப் பிடித்து, இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

"இந்தியா பக்கம் திரும்ப வேண்டிய மேட்ச் இது.. இப்டி பண்ணிட்டாங்களே.." 'சர்ச்சை'யை ஏற்படுத்திய அந்த 'சம்பவம்'... கடுப்பான 'ரசிகர்கள்'!!

337 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, தொடக்க முதலே அதிரடியாக ஆடியது. தொடக்க வீரர் பேர்ஸ்டோ (Bairstow) 124 ரன்கள் அடித்து அவுட்டான நிலையில், பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) 99 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில், 52 பந்துகளில் 99 ரன்கள் எடுத்த ஸ்டோக்ஸ், மொத்தம் 10 சிக்ஸர்களை பறக்க விட்டார். இவரது அதிரடி தான், இங்கிலாந்து அணி கிட்டத்தட்ட 6 ஓவர்களை மீதம் வைத்து வெற்றி பெற உதவியாக இருந்தது.

இதனிடையே, ஸ்டோக்ஸ் ஆடிக் கொண்டிருந்த போது, அவருக்கு ஏற்பட்ட ரன் அவுட் விவகாரம் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. முன்னதாக, 31 ரன்களில் ஸ்டோக்ஸ் ஆடிக் கொண்டிருந்த போது, புவனேஷ்வர் குமார் வீசிய பந்தை மிட் ஆன் திசையில் அடித்து விட்டு 2 ரன்கள் ஓட முயன்றார். அப்போது, அங்கு ஃபீல்டிங் நின்ற குல்தீப் யாதவ் (Kuldeep Yadav), வீசிய பந்து நேராக ஸ்டம்பை பதம் பார்த்தது.

இதனால், ஸ்டோக்ஸ் அவுட் என்பது போல தெரிந்த நிலையில், மூன்றாம் நடுவருக்கு முடிவு மாற்றப்பட்டது. அப்போது, பந்து ஸ்டம்பில் படும் போது, ஸ்டோக்ஸ் பேட்டை கிரீஸில் வைத்தது போலவும், வைக்காதது போலவும் தெரிந்தது. '50 - 50' முடிவு போல தெரிந்த நிலையில், மூன்றாம் நடுவர் அவுட்டில்லை என அறிவித்தார். இதன் பிறகு, சிறப்பாக ஆடிய பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து அணி வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.

ஆனால், ஸ்டோக்ஸிற்கு நடுவர் அவுட் கொடுக்காதது, ரசிகர்கள் மற்றும் சில முன்னாள் வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 'பேட் லைனில் பட்டது போலவே தெரியவில்லை. என்னை பொறுத்தவரை அவுட் தான்' என தனது ட்வீட்டில் யுவராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன கூட, 'நான் இருந்தால் அவுட் தான் கொடுத்திருப்பேன்' என தெரிவித்துள்ளார்.

 

ஒரு வேளை, ஸ்டோக்ஸ் அவுட் என அறிவிக்கப்பட்டிருந்தால், நிச்சயம் இந்திய அணிக்கு அது மிகப்பெரிய சாதகமாக இருந்திருக்கும். இன்றைய போட்டியுடன் தொடரைக் கூட வெல்ல வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.

அந்த ஒரு அவுட், போட்டியே மாற்றி விட்டதால், ரசிகர்கள் வருந்தி டீவீட்களை செய்து வருகின்றனர். இதனால், இந்த 'நாட் அவுட்' விவகாரமும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

மற்ற செய்திகள்