"உங்களுக்கு எல்லாம் 'பணம்' தான் முக்கியம்.." 'ஸ்டோக்ஸ்' மீது சீறிய ரசிகரால் எழுந்த 'பரபரப்பு'!.. இறுதியில் காத்திருந்த 'ட்விஸ்ட்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ளதால், அடுத்ததாக ஐபிஎல் தொடருக்கு வேண்டி, இரு அணி வீரர்களும் தங்களது ஐபிஎல் அணிகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

"உங்களுக்கு எல்லாம் 'பணம்' தான் முக்கியம்.." 'ஸ்டோக்ஸ்' மீது சீறிய ரசிகரால் எழுந்த 'பரபரப்பு'!.. இறுதியில் காத்திருந்த 'ட்விஸ்ட்'!!

இதில், இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes), ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடி வரும் நிலையில், அவர் தனது அணியினருடன் இணைந்துள்ளார்.

மேலும், இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் பற்றி பேசிய ஸ்டோக்ஸ், 'ஐபிஎல் தொடர் மீண்டும் இந்தியாவில் நடைபெறவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ரசிகர்கள் தான் இந்த தொடரின் உயிர்நாடி. மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி இருப்பதை பார்க்க அற்புதமாக இருக்கும். இந்த சீசனில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது பற்றிய விவரம் சரிவர தெரியவில்லை. ரசிகர்கள் கூட்டத்திற்கு நடுவே, கிரிக்கெட் விளையாடுவது தனி சுகம் தான்' என கூறியிருந்தார்.

இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் தொடரில் ஆடுவது பற்றி, ரசிகர் ஒருவர் ட்விட்டரில், விமர்சனம் செய்து கமெண்ட் செய்திருந்தார். தனது கருத்தில், 'பணத்தின் பின்னே ஓடி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் ஸ்டோக்ஸ், அதன் பிறகு மீண்டும், இங்கிலாந்து அணிக்காக ஆடும் போது, பந்து வீச்சில் சோர்வடைந்து விட்டேன் என கூறுவார்' என தனது நாட்டிற்காக ஆடுவதை விட, ஐபிஎல் போட்டிகளில் ஸ்டோக்ஸ் ஆடுவதாக விமர்சனம் செய்திருந்தார்.

 

ரசிகர் ஒருவரின் இந்த கருத்து, நெட்டிசன்களிடையே அதிகம் பரபரப்பை கிளப்பியிருந்த நிலையில், தன் மீதான விமர்சனத்திற்கு வேற லெவலில் பதிலடி கொடுத்து, ட்வீட் ஒன்றை ஸ்டோக்ஸ் செய்துள்ளார். தனது பதிவில், 'நான் எப்போது இங்கிலாந்து அணிக்காக பந்து வீசும் போது, அசதியாக இருந்தது என கூறியுள்ளேன்?' என ரசிகரிடமே திருப்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

பொதுவாக, இந்தியாவைச் சேர்ந்த வீரர்களைப் போல, வெளிநாட்டு வீரர்களுக்கும் ஐபிஎல் தொடர் மிகவும் பிடித்தமான தொடராகும். பணம் என்பதைத் தாண்டி, பல அற்புதமான விஷயங்கள் இந்த தொடரின் மூலம் நிகழ்கிறது. அது மட்டுமில்லாமல், இந்தாண்டு டி 20 உலக கோப்பையும் இந்தியாவில் நடைபெறவுள்ளதால், வெளிநாட்டு வீரர்கள் மிகுந்த ஆர்வத்துடன், ஐபிஎல் தொடரில் பங்கேற்கின்றனர்.

மற்ற செய்திகள்