IKK Others
MKS Others

‘நாங்க சொன்னத கோலி கேக்கல… அதான்..!’- ‘கேப்டன்ஸி’ சர்ச்சைகளுக்கு நடுவில் கங்குலியின் புது விளக்கம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி, பெரிய அறிவிப்பு எதுவும் இல்லாமல் நீக்கப்பட்டு இருப்பது சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்த முடிவுக்குக் காரணம் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யின் தலைவரும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலி தான் என்று நெட்டிசன்கள் சமுக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

‘நாங்க சொன்னத கோலி கேக்கல… அதான்..!’- ‘கேப்டன்ஸி’ சர்ச்சைகளுக்கு நடுவில் கங்குலியின் புது விளக்கம்!

இந்நிலையில் விராட் கோலிக்கு பதில் 'ரோகித் சர்மா ஏன் கேப்டன் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டார்?' என்பது குறித்து கங்குகி விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடப் போகும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி குறித்த விவரம் அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் அணிக்கு விராட் கோலி, கேப்டனாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் போட்டியின் கேப்டனாக எந்த வித முன்னறவிப்பும் இன்றி ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

BCCI's Ganguly explains on the ODI captaincy switch

இது பற்றி பிசிசிஐ தரப்பு கூறிய விளக்கத்தில், ‘‘அனைத்து இந்திய சீனியர் தேர்வுக் குழு, ரோகித் சர்மாவை இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி 20 கேப்டனாக நியமனம் செய்வது என்று முடிவு செய்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

விராட் கோலியிடம் இந்த முடிவு குறித்து விவாதிக்கப்பட்டதா, அல்லது அவர் தரப்பு இந்த முடிவு குறித்து என்ன தெரிவித்தது என்பன குறித்து எந்த தகவலும் செய்திக் குறிப்பில் இடம் பெறவில்லை. இதனால் கோலிக்கு இந்த முடிவில் திருப்தி இருந்திருக்காது என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

BCCI's Ganguly explains on the ODI captaincy switch

பிசிசிஐ- யின் உள் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள், கோலியிடம் அமைப்பு எடுத்த முடிவு குறத்து சொல்லப்பட்டது என்றும், அவராகவே முன் வந்து கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதற்கு 48 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. கோலி, டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது என்கிற முடிவில் மட்டுமே இருந்துள்ளார். அவருக்கு ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர்வதில் அதிக விருப்பம் இருந்துள்ளது. இதனால் தான், பிசிசிஐ ‘கெடு’ கொடுத்த பின்னரும் தன் முடிவில் எந்த வித மாற்றங்களையும் செய்யாமல் இருந்துள்ளார் கோலி எனக் கூறப்படுகிறது.

BCCI's Ganguly explains on the ODI captaincy switch

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் கங்குலி, ‘உண்மையில் டி20 ஃபார்மட்டின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலக வேண்டாம் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவித்தோம். அதை அவர் ஏற்கவில்லை. அவராகவே முன் வந்து கேப்டன் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து பிசிசிஐ தரப்பு மற்றும் மூத்த அணித் தேர்வாளர்கள், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்குத் தனித் தனி கேப்டன்கள் இருப்பது சரியாக இருக்காது என்று முடிவெடுத்தோம்.

அதன்படி தான், ரோகித் சர்மா இரண்டு ஃபார்மட்டுகளுக்கும் புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். இது குறித்து நான் பிசிசிஐ-யின் தலைவராக விராட் கோலியிடம் தனிப்பட்ட முறையில் பேசி, தகவலைத் தெரிவித்தேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் கோலி குறித்து கங்குலி, ‘விராட் கோலி, டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர்ந்து நன்றாக செயல்படுவார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இந்திய கிரிக்கெட் ரோகித் மற்றும் விராட் ஆகியோரது கைகளில் பத்திரமாக இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்’ என்று முடித்துக் கொண்டார்.

CRICKET, கங்குலி, கோலி, கேப்டன் பதவி, GANGULY, KOHLI

மற்ற செய்திகள்