'பணத்தை செட்டில் பண்ணாத பிசிசிஐ'!.. வருடக் கணக்கில் வீரர்களுக்கு பிரச்சினை!.. அதிரவைக்கும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகளின் போன வருட பரிசுத் தொகையே இந்த வருடம் தான் கொடுக்கப்பட உள்ளதாக அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. 

'பணத்தை செட்டில் பண்ணாத பிசிசிஐ'!.. வருடக் கணக்கில் வீரர்களுக்கு பிரச்சினை!.. அதிரவைக்கும் பின்னணி!

கொரோனா 2வது அலை இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட, ஆயிரக்கணக்கானோர் இறந்து வருகின்றனர். கோவிட் பெருந்தொற்று காரணமாக, பல நிறுவனங்களின் வருமானம் முடங்குவதால், பலரும் வேலையிழக்கின்றனர். தமிழகம் உட்பட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு நிலவுகிறது. இதனால் அன்றாட பிழைப்பை நம்பி இருப்பவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. சாமானியர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் வரை வருமானம், வாழ்வாதாரம் என்பது பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கடந்த ஆண்டு பரிசுத் தொகை, இனிமேல் தான் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தளவுக்கு எங்களுக்கு வருமான நெருக்கடி என்று பிசிசிஐ தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு நடந்த மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டில், இறுதிப் போட்டி வரை முன்னேறிய ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை பறிகொடுத்தது. 

இதனால் இந்திய அணிக்கு கிடைக்க வேண்டிய runner-up பரிசுத் தொகையான 500,000 அமெரிக்க டாலரில் இருந்து தங்கள் பங்கை வீராங்கனைகள் இந்த வார இறுதிக்குள் பெறுவார்கள் என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்திய அணிக்கு இன்னும் உலகக் கோப்பை தொடருக்கான பரிசுத் தொகை கிடைக்கவில்லை என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில், "இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் இந்த வார இறுதிக்குள் தங்கள் பரிசுத் தொகையின் பங்கைப் பெறுவார்கள். இதற்கான பணப்பரிமாற்றம் தொடங்கிவிட்டது. அவர்கள் விரைவில் தங்கள் பங்கைப் பெறுவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தான் நாங்களே பரிசுத் தொகையை பெற்றோம். அது தான் இந்த தாமதத்திற்கு காரணம். 

இது பெண்கள் அணிக்கு மட்டும் ஏற்பட்ட தாமதம் அல்ல. இது ஆண்கள் அணியின் central contract, சர்வதேச போட்டிக் கட்டணம், ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் உள்நாட்டு போட்டிகளின் கட்டணம் என அனைத்து வித கட்டணங்களும், தற்போது நிலவும் மோசமான சூழ்நிலை காரணமாக தாமதமாகும். எனவே, இந்த விஷயத்தில் பிசிசிஐ எப்போது தொகை பெற்றது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். இந்த கால தாமதம் என்பது ஆண்கள் அணிக்கும், பெண்கள் அணிக்கும் ஒரே மாதிரியானது தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்