‘அப்படி போடு’.. ஐபிஎல் ரசிகர்களுக்கு ‘குட் நியூஸ்’ சொன்ன பிசிசிஐ.. வெளியான அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கி பிசிசிஐ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் முழுவதும் மகாராஷ்டிரா மாநிலத்திலேயே நடத்தப்படவுள்ளன. அதன்படி மும்பை, நவி மும்பை, புனே ஆகிய மைதானங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் மும்பை மற்றும் நவி மும்பையில் மொத்தம் 55 போட்டிகளும், புனேவில் 15 போட்டிகளும் நடைபெற உள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் ஐபிஎல் போட்டிகளை நேரில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க 25 சதவீதத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை www.iplt20.com என்ற இணையதளத்தில் இன்று (23.03.2022) முதல் வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்