"என்னோட ஓய்வு முடிவ 'வாபஸ்' பண்ணுங்க..." கோரிக்கை வைத்த 'யுவராஜ் சிங்'... பதிலுக்கு 'பிசிசிஐ' சொன்னது என்ன??... வெளியான லேட்டஸ்ட் 'தகவல்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங், கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச மற்றும் அனைத்து உள்ளூர் போட்டிகளிலும் ஒய்வு பெற்றிருந்தார்.

"என்னோட ஓய்வு முடிவ 'வாபஸ்' பண்ணுங்க..." கோரிக்கை வைத்த 'யுவராஜ் சிங்'... பதிலுக்கு 'பிசிசிஐ' சொன்னது என்ன??... வெளியான லேட்டஸ்ட் 'தகவல்'!!!

இந்நிலையில், பஞ்சாப் கிரிக்கெட் வாரியம், யுவராஜ் சிங்கிடம் பஞ்சாப் அணிக்காக ஆடுமாறும், பஞ்சாப் அணி இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தது. இதன்படி, அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட யுவராஜ் சிங், பஞ்சாப் அணிக்காக தன்னை மீண்டும் ஆட அனுமதிக்குமாறு தனது ஓய்வு முடிவை மாற்றியமைக்க இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதே போல ஜனவரி மாதம் நடைபெறவுள்ள சையது முஷ்டாக் அலி டிராபி தொடரிலும் பஞ்சாப் அணிக்காக யுவராஜ் சிங் களமிறங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இதற்காக யுவராஜ் சிங் தீவிர பயிற்சியையும் மேற்கொண்டிருந்தார்.

இதனிடையே, யுவராஜ் சிங் தனது ஓய்வு முடிவில் இருந்து விடுபட வேண்டி எழுதியிருந்த கடிதத்தை பிசிசிஐ நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யுவராஜ் சிங் முடிவு மறுக்கப்பட்டதற்கான காரணங்கள் சரிவர தெரியவில்லை. இதனால், அவர் சையது முஷ்டாக் அலி தொடரில் பங்கேற்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

மற்ற செய்திகள்