‘ரசிகர்கள் ஆர்வம் காட்டல’.. ‘வீண் செலவுதான் ஆகுது’.. இனி ஐபிஎல் போட்டியில் இது நடக்காதா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவரும் ஐபிஎல் தொடரில் தொடக்க விழா வேண்டாம் என பிசிசிஐ முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஐபில் போட்டிகள் போதும் பிரமாண்டமாக தொடக்க விழா நடைபெறும். அந்த தொடக்க விழாவில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள், வேடிக்கைகள், திரைப்பட நட்சத்திரங்கள் என பலரும் கல்ந்துகொள்வர். ஆனால் கடந்த ஆண்டு புல்வாமா தாக்குதல் காரணாமாக தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டும் தொடக்க விழா நடைபெறாது என பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த பிசிசிஐ அதிகாரி, ‘தொடக்க விழாக்களால் பணம்தான் செலவாகிறது. இதற்கு ரசிகர்களும் பெரிதாக ஆர்வம் கட்டுவதில்லை. தொடக்க விழாவில் பங்கேற்பவர்கள் அதிகமாக பணம் கேட்கின்றனர்’ என தெரிவித்துள்ளார். முன்னதாக நடந்த ஐபிஎல் தொடக்க விழாவுக்கு மட்டும் சுமார் 30 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்க விழா நடைபெற வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.