‘இந்த தடவை 6 கிரவுண்ட்ல தான் ஐபிஎல் மேட்ச்’!?.. லிஸ்ட்ல சென்னை இருக்கா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ள மைதானங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
14-வது சீசனுக்கான ஐபிஎல் ஏலம் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. 8 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரில், ஒவ்வொரு அணியும் தங்களது சொந்த மைதானத்தில் 7 போட்டிகளிலும், வெளி மைதானத்தில் 7 போட்டிகளிலும் விளையாடுகின்றன. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு 6 மைதானங்களை மட்டுமே பிசிசிஐ தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய ஐந்து இடங்களில் நடத்த முடிவு செய்துள்ளது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் முதலில் மும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடப்பது சந்தேகம் என்று கூறப்பட்டது. ஆனால் மும்பை அணி கொடுத்த அழுத்தம் காரணமாக இங்கு போட்டிகள் நடப்பது உறுதியாகி உள்ளது. மேலும் மும்பையில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் மட்டும் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறப்படுகிறது.
இதில் அமகதாபாத் எந்த அணிக்கும் சொந்த மைதானம் கிடையாது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தெரிவித்த ஒரு அணியின் அதிகாரி ஒருவர், ‘நாங்கள் மூன்று அணிகள் மோசமாக பாதிக்கப்படுவோம். சொந்த மைதானத்தில் அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. சொந்த மைதானத்தில் 5 அல்லது 6 போட்டிகளில் வெற்றி பெற்று, வெளியில் சில போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு சொந்த மைதானம் கூடுதல் பலமாக இருக்கும். ஆனால் நாங்கள் அனைத்து போட்டிகளையும் வெளியில் சென்று விளையாட வேண்டியுள்ளது’ என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மற்ற செய்திகள்