'என்ன நடக்குது டீம்ல?.. எப்படி 'இது' நடந்துச்சு'?.. வீரர்களிடம் சரமாரி கேள்வி... லாக் ஆன கங்குலி... கோபத்தில் கொந்தளித்த ஜெய் ஷா!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் மிக மோசமான டெஸ்ட் ஆட்டத்தை தொடர்ந்து, அணியில் இருக்கும் மூத்த வீரர்களிடம் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஆடிய விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.
இந்திய அணிக்கு இது பெரிய சரிவை கொடுத்துள்ளது. இந்த போட்டியில், முதல் இன்னிங்சில் 244 எடுத்த இந்திய அணி அடுத்த இன்னிங்சில் வெறும் 36 ரன்கள் எடுத்து மிக மோசமான ஆட்டம் ஆடியது.
முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி அடுத்த இன்னிங்சில் 2 விக்கெட்டில் 93 ரன்கள் எடுத்து வென்றது.
இந்த போட்டியில் இந்திய அணியின் மோசமான தோல்வி காரணமாக பிசிசிஐ கடுமையான கோபத்தில் இருக்கிறது. பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு இதனால் ஏகப்பட்ட பிரஷர் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். கங்குலியின் மோசமான அணி தேர்வுதான் இதற்கு காரணம் என்று அடுக்கடுக்கான புகார்கள் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனும், பிசிசிஐ அமைப்பின் செயலாளருமான ஜெய் ஷா இந்திய அணி வீரர்களிடம் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளார். நேற்று இந்திய அணி வீரர்களையும், பிசிசிஐ தலைவர் கங்குலியையும் சந்தித்து ஜெய் ஷா கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளார்.
அணியில் என்ன மாற்றம் செய்ய வேண்டும், அணிக்குள் என்ன பிரச்சனை, சொதப்பியது எங்கே என்று கேள்விகளை எழுப்பி உள்ளார். இது போக மூத்த வீரர்களிடம் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார். உடனே ரிசல்ட் வேண்டும், அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் ஜெய் ஷா குறிப்பிட்டுள்ளார்.
தேவையான உதவிகளை செய்கிறேன். அணிக்கு தேவையானதை சொல்லுங்கள் என்று ஜெய் ஷா கூறியுள்ளார். இவரின் மீட்டிங் காரணமாக பல முக்கிய வீரர்கள் கலக்கத்தில் உள்ளனர். வீரர்கள் குறித்து ஜெய் ஷா தனித்தனி ரிப்போர்ட் கேட்டுள்ளார்.
வீரர்கள் என்ன செய்ய வேண்டும், யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் ரிப்போர்ட் கேட்டுள்ளார். இதன் காரணமாக இந்திய வீரர்கள் கடுமையான அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடருக்கு பின் அணிக்குள் இதனால் பெரிய அளவில் மாற்றங்கள் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்