இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த BCCI ?... இதுதான் காரணமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்தில் இருக்கும் இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
Also Read | "ஆத்தா, நான் பாஸ் ஆயிட்டேன்.." தனக்குத் தானே கட் அவுட்.. ஏரியா முழுக்க வைரலான மாணவன்.. சுவாரஸ்ய பின்னணி
இந்திய அணி இங்கிலாந்தில்….
இந்திய கிரிக்கெட் அணி தற்போது, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி முதலில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதற்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் தற்போது விளையாடி வருகின்றன. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
அடுத்தடுத்து கொரோனா தொற்று
தற்போது இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடத்திய சோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். முன்னதாக அஸ்வின் மற்றும் கோலிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீரர்கள் அடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஜூலை 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சமீபத்தில் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது.
வீரர்களுக்கு அறிவுரை
கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் இங்கிலாந்தில் இருக்கும் இந்தியவீரர்கள் அதிகமாக வெளியியில் செல்வது குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சில வீரர்கள் அப்படி வெளியில் சென்று ரசிகர்களோடு புகைப்படங்களை எடுத்துக்கொண்டது கவனத்துக்கு வந்துள்ளது. அப்படி வெளியில் சுற்றும் சில வீரர்களை அழைத்து பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வெளியுலக நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள சொல்லி அறிவுறுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ’பயோ பபுள்’ பாதுகாப்பு தற்போது இங்கிலாந்தில் இல்லை என்பது குறிப்பிடத்தகக்து.
மற்ற செய்திகள்