'டி 20' தொடருக்கான இந்தியன் 'டீம்' ரெடி... அணியில் இடம்பிடித்த '3' தமிழக வீரர்கள்.. இன்னும் யாரு எல்லாம் 'இருக்காங்க'ன்னு பாருங்க... செம 'சர்ப்ரைஸ்' லிஸ்ட்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து கிரிக்கெட் அணி, தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகள் ஆடி வரும் நிலையில், முதலாவதாக டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.
நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில், 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடருக்கான, 19 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமாகி பட்டையை கிளப்பிய நடராஜன் பெயர் மீண்டும் இடம்பெற்றுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் கலக்கிய வீரர்கள் சிலரின் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஐபிஎல் சீசனில், ராஜஸ்தான் அணிக்காக ஆடிய ராகுல் டெவாட்டியா பெயர் இடம்பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக ஐபிஎல் மற்றும் முதல் தர போட்டிகளில் கவனம் ஈர்த்து வந்த சூர்யகுமார் யாதவிற்கு ஏன் சர்வதேச அணியில் ஒருமுறை கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கும் தற்போது விடை கிடைத்துள்ளது.
சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ராகுல் டெவாட்டியா ஆகியோர் டி 20 தொடருக்காக தேர்வாகியுள்ள நிலையில், இது இவர்கள் அறிமுகமாகவுள்ள முதல் சர்வதேச தொடராகும். மேலும், ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெற்று, பின்னர் காயம் காரணமாக விலகிய தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியும் இந்த தொடருக்காக தேர்வாகியுள்ளார். வருண் சக்கரவர்த்திக்கும் இது அறிமுக தொடராகும்.
அதே போல, காயம் காரணமாக, பல மாதங்கள் கிரிக்கெட் போட்டியில் பங்கு கொள்ளாமல் இருந்த புவனேஷ்வர் குமார், மீண்டும் அணிக்கு இணைந்துள்ளது, இந்திய அணியின் பந்து வீச்சுத் துறையில் அதிக பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Virat Kohli (Capt), Rohit Sharma (vc), KL Rahul, Shikhar Dhawan, Shreyas Iyer, Suryakumar Yadav, Hardik, Rishabh Pant (wk), Ishan Kishan (wk), Y Chahal, Varun Chakravarthy, Axar Patel, W Sundar, R Tewatia, T Natarajan, Bhuvneshwar Kumar, Deepak Chahar, Navdeep, Shardul Thakur. https://t.co/KkunRWtwE6
— BCCI (@BCCI) February 20, 2021
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய டி 20 அணி விவரம் :
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், இஷான் கிஷான், யுஸ்வேந்த்ர சாஹல், வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் டெவாட்டியா, நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாகர், நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர்.
மற்ற செய்திகள்