'ஐபிஎல்' தொடரில் மாஸ் காட்டி இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக 'வீரர்'!!.. ஆஸ்திரேலியா தொடருக்கான 'இந்திய' அணி 'அறிவிப்பு'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தற்போது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி, வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட், டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது.

'ஐபிஎல்' தொடரில் மாஸ் காட்டி இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக 'வீரர்'!!.. ஆஸ்திரேலியா தொடருக்கான 'இந்திய' அணி 'அறிவிப்பு'!!!

மூன்று வடிவிலான போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் ஜொலித்து வரும் சில இளம் வீரர்கள் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார்களா என எதிர்பார்த்து வந்த நிலையில், சில வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் டி20 இந்திய அணியில் கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி இடம்பெற்றுள்ளார். கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர், மயங்க் அகர்வால், சைனி, தீபக் சாகர் என இந்த ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் வீரர்களும் டி20 அணியில் இடம்பெற்றுள்ளனர்.BCCI releases india team squad for australia tour

டி20 அணி வீரர்கள் விவரம் : விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், மயங்க் அகர்வால், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஷ்வேந்திர சாஹல், ஜஸ்பிரிட் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாகர், வருண் சக்ரவர்த்தி BCCI releases india team squad for australia tour

அதே போல ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியிலும் சுப்மான் கில், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஒரு நாள் போட்டிக்கான அணி வீரர்கள் விவரம் : விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், மயங்க் அகர்வால், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஷ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர்

டெஸ்ட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ப்ரித்வி ஷா, ஹனுமா விஹாரி, முகமது சிராஜ் ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. BCCI releases india team squad for australia tour

டெஸ்ட் அணி வீரர்கள் விவரம் : விராட் கோலி (கேப்டன்), சுப்மான் கில், ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால், கேஎல் ராகுல், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, சஹா, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ் 

BCCI releases india team squad for australia tour

காயம் காரணமாக ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் அணியில் தேர்வாகவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதே போல நான்கு additional பந்து வீச்சாளர்களாக கம்லேஷ் நாகர்கோட்டி, நடராஜன், கார்த்திக் தியாகி மற்றும் இஷான் போரில் ஆகியோர் பெயரையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. பல முன்னணி பந்து வீச்சாளர்கள் பாராட்டை பெற்ற தமிழக வீரர் நடராஜன் பெயரும் additional பவுலர்கள் பெயரில் இடம்பெற்றுள்ளது தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்