‘இவ்ளோ பாதுகாப்பையும் மீறி எப்படி கொரோனா பரவுனது..?’.. ஒருவழியாக ‘மவுனம்’ கலைத்த சவுரவ் கங்குலி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 29 லீக் போட்டிகள் இதுவரை முடிந்துள்ளன. இந்த நிலையில் திடீரென ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த கிரிக்கெட் வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் தொடரை தற்காலிகமாக நிறுத்துவதாக பிசிசிஐ தெரிவித்தது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால், இந்த ஆண்டும் ரசிகர்கள் இன்றி ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் கிரிக்கெட் வீரர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, பயோ பபுளில் இருந்து பாதுகாப்பாக விளையாடி வந்தனர். இந்த சமயத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் ஷர்மா ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்து மற்ற வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் எல்.பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் அணியின் சாஹா மற்றும் டெல்லி அணியின் அமித் மிஸ்ராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இப்படி தொடர்ந்து வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், பிசிசிஐ அவசர ஆலோசனை மேற்கொண்டது. இதனை அடுத்து தற்காலிகமாக ஐபிஎல் தொடரை நிறுத்துவதாக பிசிசிஐ தெரிவித்தது. இவ்வளது பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி எப்படி கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரவியது? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்ட பின் The Indian Express சேனலுக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ‘எங்களுக்கு வந்த தகவலின்படி யாரும் பயோ பபுளை மீறவில்லை. ஆனாலும் எப்படி வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவியது என்பது தெரியவில்லை’ என கங்குலி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்