என்னடா இது, அனுஷ்கா ஷர்மா '52 ரன்' அடிச்சாங்களா...? 'official பேஜ்ல வேற போட்ருக்கே...' 'தலையை பிச்சுக்கிட்ட ரசிகர்கள்...' - கடைசியில் தெரிய வந்த உண்மை...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிசிசிஐ தன் அதிகார பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் அனுஷ்கா ஷர்மா 88 பந்துகளில் 52 ரன்கள் எடுத்துள்ளதாக பதிவிட்ட சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பிசிசிஐ மகளிர் ஒருநாள் சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் பங்குக்கொள்ளும் இந்த தொடரில் இந்தியா-ஏ, இந்தியா-பி, இந்தியா-சி மற்றும் இந்தியா-டி என நான்கு அணிகளாக பிரிக்கப்படும்.
இந்நிலையில், நேற்றைய (02-11-2021) ஆட்டத்தில் இந்தியா-ஏ அணியும் இந்தியா-பி அணியும் மோதின. அப்போட்டியின் ஸ்கோர் அப்டேட்கள், 'BCCI Women' என்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு வந்தது.
அப்போது, 'இந்தியா பி அணியின் வீராங்கனை அனுஷ்கா ஷர்மா 88 பந்துகளில் 52 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியா பி, அணியின் ஸ்கோர் 140/0' என ட்விட் செய்யப்பட்டிருந்தது. இதனை கண்ட கிரிக்கெட் ரசிகர்களும், நெட்டிசன்களும் குழப்பத்தில் உறைந்தனர்.
என்னடா இது இந்த பக்கம் இந்திய அணி டி-20 உலககோப்பையில் சரியாக விளையாடவில்லை என விராட் கோலியை ஒரு திட்டிவரும் நிலையில் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா 88 பந்துகளில் 52 ரன்கள் எடுத்துள்ளதாக ட்வீட் செய்யப்பட்டுள்ளது. ஒரு வேலை பிசிசிஐ மகளிர் அணி கிண்டல் செய்கிறதா என்ற அளவிற்கு யோசித்துள்ளனர் நம் ஆட்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால் இந்தியா பி அணியின் கேப்டனாக இருப்பவர் அனுஷ்கா பிரிஜ்மோகன் ஷர்மா. அவரே நேற்றைய தொடரில் 88 பந்துகளில் 52 ரன்கள் எடுத்துள்ளார். இது தெரியாமல் விராட் கோலி மனைவி அனுஷ்காவை வைத்து மீம்ஸ்களாக மாற்றி பகிர்ந்து வந்தனர்.
Anushka Sharma 52 runs in 88 balls (5x4, 1x6) India B 140/0 #U19ChallengerTrophy
— BCCI Women (@BCCIWomen) November 2, 2021
மற்ற செய்திகள்