இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் என்பதை... மீண்டும் நிரூபித்த நடராஜன்!.. தெறியான come back!.. ஆவலுடன் காத்திருக்கும் பிசிசிஐ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

காயம் காரணமாக ஐபிஎல்-லில் இருந்து விலகி அறுவை சிகிச்சை மேற்கொண்ட நடராஜன் வெளியிட்ட வீடியோ ரசிகர்களிடையே பெரும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் என்பதை... மீண்டும் நிரூபித்த நடராஜன்!.. தெறியான come back!.. ஆவலுடன் காத்திருக்கும் பிசிசிஐ!

இந்தியா முழுவதும் வீசும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக, ஐபிஎல் 2021 தொடர், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலாக தொற்று உறுதி செய்யப்பட, அடுத்தடுத்து பல வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கொரோனா பரவத் தொடங்கியது.

இதனால் பதறிய பிசிசிஐ, தொடரை உடனே நிறுத்த, ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவில் தங்க வைக்கப்பட்டனர். மற்ற வீரர்கள் அவரவர் நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆஸ்திரேலிய வீரர்களும் நேற்று சிட்னி சென்றடைந்தனர்.

ஐபிஎல் 2021 சீசன் நிறுத்தப்படுவதற்கு முன்பே, முழங்கால் காயம் காரணமாக தமிழக வீரர் நடராஜன் சன்ரைசர்ஸ் அணியில் இருந்து விலகியிருந்தார். வெறும் 2 ஆட்டங்களில் மட்டுமே ஆடியிருந்த நடராஜனுக்கு நாளுக்கு நாள் காயத்தின் வீரியம் அதிகரித்தது. நடராஜனுக்கு ஏற்பட்ட முழுங்கால் காயத்திலிருந்து அவர் முழுமையாக குணமாகாமல் தான் இருந்தார். 

என்சிஏவில் ஏற்கெனவே சிகிச்சை பெற்றுத் திரும்பிய நடராஜன் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டி20, ஒருநாள் போட்டியில் விளையாடினார். எனினும், அவர் 100 சதவீதம் உடற்தகுதியுடன் இல்லை. ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் பங்கேற்றவுடன் மீண்டும் முழங்கால் வலி ஏற்பட்டதால், அவர் சிகிச்சைக்காக பெங்ளூரு என்சிஏவுக்கு செல்ல உள்ளார் என்று கூறப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரலில் அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இப்போது தொடர் ஓய்வில் இருக்கும் நடராஜன், இன்ஸ்டாகிராமில், தனது வீட்டில் இருந்தே பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், முன்பை விட நான் ஒவ்வொரு நாளும் மிக வலிமையாக எழுகிறேன் என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, அவர் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என்றும், இந்திய அணி அவரை மீண்டும் அணியில் விரைவாக பார்க்க விரும்புகிறது என்றும் பிசிசிஐ தரப்பில் சொல்லப்படுகிறது. 

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்து செல்ல உள்ள நிலையில், அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆகையால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என நடராஜன் அனைத்திலும் விளையாட முடியாத சூழல் உள்ளது.

எனினும், அவர் ஆகஸ்ட் மாதம் வரை முழுமையாக ஓய்வில் இருக்க முடியும். இதனால், அக்டோபரில் தொடங்கவுள்ள உலகக் கோப்பைத் தொடருக்கு நடராஜன் தன்னை பக்காவாக தயார் செய்து கொள்ள முடியும் என்பதில் சந்தேகமில்லை.

 

 

மற்ற செய்திகள்